தூத்துக்குடி
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் கடந்த ஆண்டு பெய்த கனமழையால் பல்வேறு சாலைகள் முழுமையாக சேதமடைந்தன. அப்பணிகளை மேற்கொள்வதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 8 கோடியே 80 லட்சம் மதிப்பீல் 128 சாலைகள் அமைப்பதற்கான ஓதுக்கிய நிதியிலிருந்து அதற்கான பூமிபூஜை குமரன்நகாில் நடைபெற்றது. தூத்துக்குடி கிழக்கு ஓன்றிய திமுக செயலாளரும் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவருமான சரவணக்குமார் தலைமை வகித்தார். ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா பூமிபூைஜயை தொடங்கி வைத்து 128 சாலை பணிகளை தொடங்கி வைத்தார். அதில் 68 சாலைகளும் 60 பேவர் பிளாக் சாலைகளும் அமைக்கும் பணி தொடங்கப்பட்டன.
விழாவில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் மாணிக்க வாசகம், உதவி செயற்பொறியாளர் ரவி, வருவாய் ஆய்வாளர் வேல்ராஜ், தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, ஓன்றிய அவைத்தலைவர் ஜோதிடர் முருகன், துணைச்செயலாளர்கள் கணேசன், ராமசந்திரன், மாவட்ட பிரதிநிதிகள் தர்மலிங்கம், சிவக்குமார், தெற்கு மாவட்ட திமுக மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ஆரோக்கிய மோி, ஓன்றிய மகளிர் அணி அமைப்பாளா் ஜெஸிந்தா, ஊராட்சிமன்ற உறுப்பினர் பாரதிராஜா, கிளைச்செயலாளர்கள் பொன்னுச்சாமி, அம்புரோஸ், சந்திரசேகர், வேல்ராஜ், வடிவேல், மகாராஜா, மாாியப்பன், காசி, ஊர் தலைவர் ராயப்பன், மாவட்ட சமத்துவ மக்கள் கட்சி செயலாளர் வில்சன், மகளிர் அணி சண்முகத்தாய், ரூபி, வளர்மதி, மற்றும் சேவியர், கௌதம், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

