தூத்துக்குடி, மார்ச், 11
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறை, மாவட்ட கலை மன்றம், தூத்துக்குடி சார்பில்
2022 – 23 ஆண்டில் மாவட்ட அளவில் சிறந்த நாட்டுப்புற பாடகர், சிறப்பு விருதுக்குறிய கலைச்சுடர் மணி என்ற பட்டத்தையும் தமிழன்டா எஸ் ஜெகஜீவன் -க்கு
மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமிபதி
வழங்கி பாராட்டு தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமிபதி இந்த விருது வழங்கும் விழாவில் பங்கேற்று 2022 – 2023 ஆம் ஆண்டில் 15 நபர்களுக்கும் 2023 -2024 ஆண்டில் 15 நபர்களுக்கும் விருதுகள் வழங்கி தனித்தனியாக கௌரவித்தார்.
இந்த நிகழ்வானது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் நாட்டுப்புறக் கலைஞர் சேர்மத்துரை, வீதி நாடக பயிற்சியாளர் செந்தில், பரதநாட்டிய கலைஞர் மாணிக்கம், நாட்டுப்புற கலைஞர் கருணாநிதி உட்பட 30 கலைஞர்களுக்கு விருதுகள், சால்வைகள் பண முடிப்பு போன்றவை வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் சீனிவாசன், கலை பண்பாட்டு துறை உதவி இயக்குனர் கோபாலகிருஷ்ணன், தூத்துக்குடி அரசு பள்ளி தலைமை ஆசிரியை சிவகாமி உட்பட பல முக்கிய அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடியைச் சார்ந்த
தமிழன்டா எஸ் ஜெகஜீவன் பள்ளி மாணவர்களுக்கு தமிழ் பாரம்பரிய மிக்க விளையாட்டுக்கள் தமிழ் கலாச்சாரம் அடங்கிய பறையாட்டம், தப்பாட்டம், போன்ற பயிற்சிகள் பள்ளி மாணவர்களுக்கு வழங்கி வருவதோடு சமூக அக்கறையோடு பல்வேறு மக்கள் நலப் பணிகளையும் செய்து வருகிறார். இவருக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களால்
வழங்கப்பட்ட
கலைச்சுடர் மணி என்ற பட்டம் வழங்கப்பட்டது. மிகுந்த பாராட்டுதலுக்குரியது என்று பல்வேறு சமூக ஆர்வலர்கள், பல்வேறு அமைப்புகள், பத்திரிகை துறை சார்ந்தவர்கள் அரசு துறை சார்ந்தவர்கள் உள்ளிட்ட ஏராளமான முக்கிய பிரமுகர்களிடமிருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
கலைச்சுடர் மணி என்ற விருது பெற்ற தூத்துக்குடி தமிழன்டா ஜெகஜீவனுக்கு
போலீஸ் செய்தி இணையதளம் குழுமம் சார்பில் மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.

