தூத்துக்குடி சோழபுரம் அருகேயுள்ள புங்கவர்நத்தம் காமாட்சி அம்மன் கோவிலில் மாசி திருவிழாவை யொட்டி உலக மக்கள் அமைதிக்காவும், நோய் நொடி இல்லாமல், மழை வளம், செல்வளம், விவசாயம் செழித்தோங்கிட வேண்டி 501 திருவிளக்கு பூஜை சிறப்பு பஜனையுடன் நடைபெற்றது.
பின்னர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இரவு பாரிவேட்டை, சாமக்கொடை திருவிழாவும் வெகு சிறப்பாக நடைபெற்றது. பின்னர் காலையில் அனைத்து வரிதார்களும் ஊர் பொதுமக்களும் கலந்து கொண்டு காமாட்சி அம்மனுக்கு பொங்கலிட்டனர். மதியம் சிறப்பு பூஜையுடன் திருவிழா இனிதே நிறைவு பெற்றது. கோவில் திருவிழாவிறக்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

