தூத்துக்குடி மார்ச், 7
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி 68 குக்கிராமங்களை உள்ளடக்கியது. சுமார் ஒன்றரை லட்சம் ஜனத்தொகையை கொண்டு சுமார் 40 ஆயிரம் வாக்காளர்களை உள்ளடக்கிய மிகப்பெரிய ஊராட்சியாக
மாப்பிள்ளையூ ரணி ஊராட்சி
இருந்து வருகிறது. மக்கள் ஜனத்தொகைக்கு ஏற்ப கட்டமைப்பு பணிகளை ஊராட்சி மன்றத் தலைவர் சரவணகுமாரின் தொடர் முயற்சியில் இந்த ஊராட்சி நிர்வாகம் பொதுமக்களுக்கு சிறப்பாக செய்து வருகிறது.
இந்த பஞ்சாயத்து பகுதிகளில்
குடிதண்ணீர் முறையாக விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில் வருகிற கோடை காலம் முன்னிட்டு குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏதும்
இப்பகுதி பொது மக்களுக்கு ஏற்படாத வண்ணம் வருகிற கோடை காலங்களிலும் சீரான குடிநீர் வழங்க வேண்டும். குடியிருப்பவர்களின் வீடுகளுக்கு புதிதாக குடிநீர் இணைப்பு வழங்குவது சம்பந்தமாக தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவர்நலன் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சண்முகையா எம்எல்ஏ வழிகாட்டுதலின்படி மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவரும் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளருமா ன சரவணக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த முக்கிய ஆலோசனை கூட்டத்தில் பிளம்பர்கள், குடிநீர் வினியோக பிரிவு ஊழியர்கள், ஒப்பந்தக்காரர்கள், ஆகியோருக்கு முக்கிய ஆலோசனைகளை இந்த கூட்டத்தில் சரவணக்குமார் வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில் ஊராட்சிக்குட்பட்ட பிளம்பர்கள் பொதுமக்களின் முக்கிய வாழ்வாதாரமாக இருக்க கூடிய குடிதண்ணீர் எல்லா பகுதிக்கும் தடையின்றி செல்ல வேண்டும் சிறு சிறு குறைபாடுகள் இருந்தாலும் அது பற்றி உடனடியாக எனது கவனத்திற்கு கொண்டு வந்து அதை விரைவாக தீர்த்து வைக்க வேண்டும் கோடை காலங்களிலும்
பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்கிய பஞ்சாயத்து மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து என்ற பெயரை பெற்று விளங்க வேண்டும். பொதுமக்கள் நலன் தான் நமக்கு முக்கியம் என்ற கடமை உணர்வு எல்லோருக்கும் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்த முக்கிய ஆலோசனை கூட்டத்தின் போது
ஊராட்சி மன்ற செயலாளர் ஜெயக்குமார்,
ஒன்றிய கவுன்சிலர்
தொம்மை சேவியர்,
தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி மாவட்ட அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி
மாவட்ட பிரதிநிதி சப்பானி முத்து
வார்டு உறுப்பினர் சக்திவேல், முன்னாள் வார்டு உறுப்பினர் ஜெயசீலன், ஒன்றிய துணைச் செயலாளர்கள்
கணேசன், ராமச்சந்திரன், கிழக்கு ஒன்றிய திமுக பொருளாளர் மாரியப்பன், ஒன்றிய வழக்கறிஞர் அணி அமைப்பாளர் சோனா ராஜன், கௌதம், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

