தூத்துக்குடி
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் ஏபிசிவி சண்முகம் பேசுகையில் 20 ஆண்டுகளாக திமுகவுடன் நட்புறவாக இருந்து வருகிறோம் 1949ல் திமுக ஆரம்பிக்கப்பட்டு 75வருடம் அடைந்த கட்சியை பார்த்து பிரதமர் மோடி திமுகவை அழிக்க வேண்டும் என்று பேசி வருகிறார். மோடியானாலும் அமித்ஷாவானாலும் ஏன் உங்க அப்பா வந்தாலும் திமுகவை அழிக்க முடியாது. திமுகவுக்கு என்று வரலாறுகள் நிறையஉண்டு இந்த நாட்டில் பிரதமர் மோடியும் அண்ணாமலையும் வேஷம் போடும் திருடர்கள் அவா்களுக்கு அடிமையாக இருந்த எடப்பாடி இன்று வாய்க்கு வந்தபடி தமிழகத்தில் போதை பொருட்கள் கலாச்சாரம் பெருகி விட்டது என்று கூறுகிறாா். குஜராத் உத்திரபிரதேசம் மாநிலங்களில் போதை பொருட்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. அதை பற்றி முதலில் பேசுங்கள் ஓன்றிய அரசு நிதி பாதி மாநில அரசு பாதி என்று இணைந்து தான் எந்த மாநிலத்திலும் சில திட்டங்கள் நடைபெறும் ஓன்றிய அரசு பங்களிப்பு மட்டுமே இருக்காது தமிழகத்தில் வாஜ்பாய் அரசின் 5 ஆண்டுகாலம் உங்கள் ஆட்சியின் 10 ஆண்டுகாலம் சாதனைகளை பற்றி பேசாமல் எம்ஜிஆர் ஜெயலலிதா ஆட்சி செய்ததை பற்றி பேசுகிறீர்கள் உங்களுக்கு மாணம் இல்லையா, கர்நாடகா நிதிபதி குன்ஹா, ஜெயலலிதாவையும் அவரது தோழி சசிகலாவையும் ஊழல் செய்த குற்றவாளி என்று பகிரங்கமாக அறிவித்து தண்டனை வழங்கப்பட்ட ஜெயலலிதாைவ புகழ்ந்து பேசுகிறீர்கள். உங்களுக்கு வெட்கம் இல்லையா, எம்.ஜி,ஆர் மறைவிற்கு பின்பு ஜானகி, முதல்வரானார். இது வாாிசு அரசியல் இல்லையா, படத்தில் நடனக்காரியாக இருந்த ஜெயலலிதா கட்சி தொடங்கிய எம்.ஜி.ஆர் மறைவிற்கு பின்பு அந்த கப்பலில் ஜெயலலிதா பயணம் செய்தாா். திமுக வாாிசு கட்சி என்று பிரதமர் கூறுகிறார். உங்களுக்கு வாாிசு இல்லை என்பதற்காக நாங்களா வாாிசு ஏற்படுத்தி கொடுக்க முடியும். ஊழலை உலகம் முழுவதும் சட்டமாக்கிய கட்சி பிஜேபி, கட்சிநிதி என்ற பெயாில் பத்திரமாக வாங்குவதற்கு போட்ட சட்டத்தை உச்சநீதிமன்றம் கண்டம் தொிவித்து. ரத்து செய்தது இது எவ்வளவு அவமானம். இந்த ஊழல் பணம் யார் கொடுத்தது 33 கார்ப்பரேட் நிறுவனங்களிடம் 14 ஆயிரம் கோடி பெற்றுள்ளீர்கள் இவை அனைத்துமே சிபிஐ அமலாக்கத்துறை வருமானவாித்துறை மூலம் வசூலிக்கப்பட்டது. 52 இஞ்ச் மார்பளவு உள்ளவர் என்று கூறிய உங்களது ஆட்சியில் பல்வேறு இழப்புகளும் சோதனைகளும் தான் அதிகம் தமிழகத்தில் கடன் அதிகமாகிவிட்டது. என்று பேசுகிறீர்களே உங்கள் ஆட்சியில் எவ்வளவு கடன்வாங்கியுள்ளீர்கள் என்பதை எண்ணிபாருங்கள் மழை வௌ்ளம் புயல் என பாதித்த தமிழகத்திற்கு எந்த நிதியும் வழங்கவும் இல்லை. பிரதமர் மோடி வந்து பார்க்கவும் இல்லை இவர் தமிழ்நாட்டின் மீது அக்கறை கொண்டவர் என்று பேசுகிறாா். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6 ஆயிரம் கொடுத்த மாபெரும் மாமனிதர் டிஆர் பாலு தலைமையிலான குழு சந்தித்த போது நிதி ஓதுக்கீடு செய்கிறேன் என்று சொல்லி அனுப்பிய பின்பும் இன்று வரை எதுவும் வரவில்லை 2014ல் பிேஜபி கூட்டணி ஆட்சி தான் அமைத்தது தனித்து ஆட்சி அமைக்க தயாரா என்று கேட்பதில் என்ன நியாயம் இருக்கிறது இனி கூட்டாட்சி தான் இருக்கும் ஓன்றே குலம் ஓருவனே தேவன் என்று அண்ணா காலத்திலேயே ஆன்மீகத்திற்கு திமுக முக்கியத்துவம் கொடுத்துவிட்டது. ஊழலை ஓழிப்பேன் என்று கூறிய பிஜேபி இதுவரை இந்தியாவில் 573 எம்.பி எம்எல்.ஏக்களுக்கு கோடி கணக்கில் பணம் கொடுத்து விலைக்கு வாங்கிய உங்கள் ஆட்சியா ஊழல் இல்லாத நோ்மையான தற்போது சில மாநிலங்களை ஆளும் காங்கிரஸ் கட்சியை கவிழ்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளீர்கள் இப்படி ஓட்டுமொத்த ஊழலையும் செய்து கொண்டு நாட்டு மக்களை ஏமாற்றி வரும் பிஜேபி அரசுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். 50 ஆண்டுகளாக தூத்துக்குடி உப்பள தொழிலாளர்கள் குறைபாடுகள் இருந்ததை கனிமொழி எம்.பி அதை சீர் செய்து கொடுத்து ெதாழிலாளர்களின் வாழ்வில் விளக்கேற்றியுள்ளார். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று சமஉாிமையை நிதிகட்சி காலத்திலேயே கடைபிடிக்க தொடங்கி விட்டது. இந்தியாவை காப்பாற்றுவதற்கு முதல் ஆளாக களம் இறங்கி இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதலமைச்சர் ஸ்டாலின் தான் தேசப்பற்று உள்ளவர். உங்களோடு நாங்கள் காங்கிரஸ் துணையாக இருப்போம் இந்தியா கூட்டணி வெல்லட்டும் தமிழகத்தில் விடிவௌ்ளி முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சி தொடரட்டும் என்று பேசினாா்.
மாநில மாணவரணி தலைவர் ராஜீவ்காந்தி பேசுகையில் பல்வேறு மொழிகள் பல்வேறு மதங்கள் பல்வேறு கலாச்சாரங்கள் பல்வேறு உணவு வகைகள் இவற்றையெல்லாம் பின்பற்றும் ஓட்டு மொத்த இந்தியாவையும் பிரதமர் மோடி ஓரே மொழி இந்தி தான் பேச வேண்டும் என்பதையும் ஓரே மதம் தான் இருக்க வேண்டும் என்பதையும் ஓட்டுமொத்த இந்தியாவிலுள்ள மக்கள் ஏற்றுக்கொள்ளும் கருத்தாக இருக்க முடியாது பன்முகதன்மை கொண்ட இந்தியாவை சிதைக்கும் விதமாக பிஜேபி அரசு தேவையில்லாத பல்வேறு கொள்கைகளையும் சட்டங்களையும் உருவாக்கி வருவதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக அமைய வேண்டும். இதற்கு ஓரு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் மோடி 80 வயது முதியவர்க்கும் 7 வயது சிறுவனுக்கும் 8ம் நம்பர் உள்ள ஓரே மாடல் செருப்பை அணிய சொல்கிறார். இது ஏற்றுக்கொள்ளும் செயல்தானா என்பதை சிந்திக்கும் நேரம் இது என்று பேசினாா்.

