தூத்துக்குடி மாநகர திமுக சாா்பில் திராவிட மாடல் நாயகாின் பிறந்தநாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகில் நடைபெற்றது. மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை வகித்தார். பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், நிர்மல்ராஜ், மேகநாதன், சுரேஷ்குமார், ரவிந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உாிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் பேசுகையில் உழைப்பு என்றால் ஸ்டாலின், ஸ்டாலின் என்றால் உழைப்பு என 50 ஆண்டுகளுக்கு மேலாக பொதுவாழ்வில் ஈடுபட்டுக்கொண்டு தளபதியார் பணியாற்றி வரும் வேலையில் இந்த அரசாங்கம், ஆயிரம் உாிமைத்தொகை வழங்கியுள்ளது. ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட காரர்களுடன் இணைந்து உச்சநீதிமன்றத்தில் சட்டப்போராட்டத்தின் மூலம் ஆலை மூடப்பட்டது முதல்வர் ஆட்சியில் சாதனை. அதிமுக ஆட்சிக்காலத்தில் நம்முடைய அனைத்து உாிமைகளையும் விட்டுக்கொடுத்து விட்டதால் பல்வேறு பாதிப்புகளை நாம் சந்தித்து வருகிறோம். அதிலும் குறிப்பாக நீட் தோ்வு புதிய கல்வி கொள்கை உதய்மின் திட்டம் குடியுாிமைசட்டம் எல்லாவற்றையும் ஆதாித்து விட்டு எடப்பாடி இன்று வேஷம் போடுகிறார். இவரை போல் தளபதி இருப்பார் என்று மோடி எதிர்பார்த்தாா். அந்த உடன்பாடுகளுக்கு எல்லாம் ஒத்து போகாமல் நான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அடிபணிய மாட்டேன். என்று கூறி தமிழர்கள் நலனில் அக்கறை கொண்டு தமிழகத்திற்காக பணியாற்றி வருகிறார். 1949ல் திமுக தோன்றிய காலத்திற்கு பின்பு அனைத்து தரப்பினருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்களில் முன்னேறி வருவது மட்டுமின்றி ஜாதி மத வேறுபாடின்றி அனைவரும் ஏற்றத்தாழ்வு இல்லாமல் வாழ்ந்து வருகிறோம் கனிமொழி எம்.பியின் குரல் இந்த மாவட்டத்திற்கு மட்டுமின்றி தமிழ்நாட்டிற்கும் சேர்த்து பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தார். மனிப்பூர் சம்பவத்திற்கு கடுமையான பதிவுகளை கூறி பேசியதின் காரணமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மக்களுடைய எதிர்பார்ப்புக்கு மேல் அவரது பணி வௌ்ளம் மழை காலங்களில் சிறப்பாக அமைந்தது. அவரை அதிகமான வாக்கு வித்தியாசத்தில் நாம் வெற்றி பெற வைக்க வேண்டும். பாசிசம் வீழட்டும் இந்தியா வெல்லட்டும் என்று பேசினார்.
கூட்டத்தில் மேயா் ஜெகன் பொியசாமி, மாநில மீனவரணி துணை செயலாளர் புளோரன்ஸ், மாநில பேச்சாளர்கள் சரத்பாலா, இருதயராஜ், மாநகர துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, வடக்கு மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, கஸ்தூரிதங்கம், மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, அன்னலட்சுமி, கலைச்செல்வி, மாவட்ட அணி அமைப்பாளர்கள் மதியழகன், அந்தோணிஸ்டாலின், ரமேஷ், கவிதாதேவி, அன்பழகன், சீனிவாசன், குபேர் இளம்பரிதி, அபிராமி நாதன், வக்கீல் அசோக், துணை அமைப்பாளர்கள் கோகுல்நாத், பிரபு, அந்தோணிகண்ணன், அருணாதேவி, மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், சக்திவேல், சேர்மபாண்டியன், செல்வகுமார், மாநகர அணி அமைப்பாளர்கள் ஜீவன்ஜேக்கப், முருகஇசக்கி, பரமசிவம், சீதாராமன், அருண்சுந்தர், கிறிஸ்டோபர் விஜயராஜ் டேனி, துணை அமைப்பாளர்கள் சங்கரநாராயணன், சிவக்குமார் என்ற செல்வின், ரவி, முகம்மது ஜெயலாப்தீன், பிரவீன்குமார், பால்ராஜ், குமரன், வினோத், மகேஸ்வரன்சிங், தொழிற்சங்க செயலாளர் மரியதாஸ், மாநகர இலக்கிய அணி தலைவர் சக்திவேல், துணை தலைவர் நலம் ராஜேந்திரன், அரசு வக்கீல்கள் மோகன்தாஸ் சாமுவேல், சுபேந்திரன், ஆனந்தகபேரியல்ராஜ், மாலாதேவி, பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், வட்டச்செயலாளர்கள் கதிரேசன், சுப்பையா, பாலகுருசாமி, ராஜாமணி, கருப்பசாமி, சுரேஷ், கங்காராஜேஷ், டென்சிங், லியோ, ஜான்சன், பொன்ராஜ், முத்துராஜா, பாலன், ரவிசந்திரன், தகவல் தொழில்நுட்ப அணி சுரேஷ்குமார், கவுன்சிலர்கள் சரவணக்குமார், ஜெயசீலி, நாகேஸ்வரி, வைதேகி, தெய்வேந்திரன், கந்தசாமி, ஜான்சிராணி, அந்தோணி பிரகாஷ்மார்ஷல், பவாணி மார்ஷல், சுப்புலட்சுமி, பொன்னப்பன், ராஜேந்திரன், ராஜதுரை, ரெக்ஸின், கண்ணன், விஜயலட்சுமி, சரண்யா, பேபி ஏஞ்சலின், ஜாக்குலின்ஜெயா, மகளிர் அணி ரேவதி, சத்யா, பெல்லா, மற்றும் கருணா, மணி, பிரபாகர், ஜோஸ்பர், அல்பட், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

