தூத்துக்குடி
திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கடற்கரையில் உள்ள கலைஞர், அண்ணா நினைவிடங்களிலும், பெரியார் நினைவிடத்திலும் மலர் தூவி வணங்கினார். பின்னர் அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏ.க்கள் மாவட்ட செயலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் நேரில் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் மாவட்டம் முழுவதும் திமுக சாதனை விளக்க பாடல்கள் ஆட்சி சாதனையின் துண்டு பிரசுரங்களை வீதிதோறும் வழங்கி நலத்திட்ட உதவிகளுடன் பிறந்தநாளை கொண்டாட வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார்.
அதன்படி தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஏற்பாட்டில், வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் தூத்துக்குடி, சிதம்பரநகர் பகுதியில் நியூ நேச கரங்கள் முதியோர் இல்லத்தில் உள்ள 100 பேருக்கு காலை உணவும், இனிப்புகளும் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பிரதீப் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் வட்டபிரதிநிதி துரை, திமுக பிரமுகர் மணிகண்டன், வெங்கட்ராம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

