தூத்துக்குடி
பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற 28ம் தேதி அன்று தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைக்கவுள்ளதை தொடர்ந்து, விழா நடைபெறும் இடத்தில் நடைபெற்று வரும் முன்னேற்பாடுப் பணிகளை மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
ஆய்வின் போது வ.உ.சி. துறைமுக தலைமைப் பொறியாளர் ரவிக்குமார், தலைமை இயந்திரப் பொறியாளர் சுரேஷ்பாபு, வருவாய் கோட்டாட்சியர் பிரபு, தூத்துக்குடி வட்டாட்சியர் பிரபாகரன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

