• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

செய்துங்கநல்லூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு  அனைத்துக் கடை வியாபாரிகள்நலச்சங்கம்  சார்பில் நிவாரணத் தொகை வழங்கல் : சங்கத் தலைவர் கே.எஸ். முருகன் வழங்கினார்.

policeseithitv by policeseithitv
February 8, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
செய்துங்கநல்லூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு   அனைத்துக் கடை வியாபாரிகள்நலச்சங்கம்   சார்பில் நிவாரணத் தொகை வழங்கல் : சங்கத் தலைவர்  கே.எஸ். முருகன் வழங்கினார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

 

தூத்துக்குடி பிப்,8

 

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரில் அனைத்துக் கடை வியாபாரிகள் நலச்சங்கம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் அப்பகுதியை சேர்ந்த வியாபாரிகள் பலரும் உறுப்பினர்களாக தங்களை இணைத்து கொண்டுள்ளனர். இந்த சங்கத்தின் தலைவராக கே.எஸ். முருகன் செயல்பட்டு வருகிறார்.

 

ஏதோ வியாபாரிகள் சங்கம் ஒன்றை அமைத்துக் கொண்டு ஆண்டு சந்தா மட்டும் வசூலிக்கும் சங்கமாக இல்லாமல் வியாபாரிகள் நலனில் தனி அக்கறை கொண்டு செயல்பட்டு வருவதோடு வியாபாரிகளின் பாதுகாவலாக விளங்கி வரும் சங்கமாக

செய்துங்கநல்லூரில் உள்ள

அனைத்துக் கடை வியாபாரிகள் நலச்சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தின் நிர்வாகிகள் எடுத்து வரும் ஒவ்வொரு அதிரடி நடவடிக்கையும் வியாபாரிகள் மற்றும் சங்க உறுப்பினர்கள் மத்தியில் மிகுந்த பாராட்டை பெற்றுள்ளது. குறிப்பாக இந்தப் பகுதியில் உள்ள வியாபாரிகள் பலரும் தங்கள் கடைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை சார்பில் உரிமம் பெற வேண்டியது இருந்த நிலையில் கடைக்காரர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கடைக்கு உரிமை பெறுவதற்கு கடையை அடைத்துக் கொண்டு

உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்திற்கு சான்றிதழ்கள் பெற அலைந்த வண்ணம் இருந்தன. இதற்கு ஒரு தீர்வு கிடைக்கும் வகையில் சங்கத் தலைவர் கே எஸ் முருகன் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரியை தொடர்பு கொண்டு செய்துங்கநல்லூர் பகுதியில் முகாம் அமைத்து உணவு பாதுகாப்பு துறை சார்பில் வழங்கப்படும் சான்றிதழ் உரிமைகள் தேவைப்படும் வியாபாரிகள் அனைவரும் அங்கே வந்து வழங்குமாறு வேண்டுகோள் வைத்துள்ளார். இதனை ஏற்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இங்கு முகாம் அமைத்தனர் அப்பகுதியில்உள்ள வியாபாரிகள் பலரும் பயன் பெறும் வகையில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் அவர்களுக்கு சான்றிதழ் வழங்கினர். இதனால் வியாபாரிகள்

அலைச்சல் தவிர்க்கப்பட்டது. அதுபோல் இந்த சங்கத்தில் உறுப்பினராக இருப்பவர்கள் இல்லங்களில் திருமணம் நடைபெற்றால் அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் ஒன்றிணைந்து சங்க உறுப்பினர்கள் ஒவ்வொரு நபரும் தங்களால் முடிந்தது கொடுத்து

.ஒரு பெரும் தொகையை திருமண செலவிற்காக இந்த வியாபாரிகள் சங்கம் சார்பாக வழங்கப்படுகிறது வழக்கமாக உள்ளது. இதுபோல் பல்வேறு வகையில் வியாபாரிகள் நலன் கருதி  செய்துங்கநல்லூரில் உள்ள அனைத்துக் கடை வியாபாரிகள் நலச்சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 17,18 தேதிகளில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்ட கனமழை காரணமாக அனைத்து தரப்பினர்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டது..

குறிப்பாக  செய்துங்கநல்லூரில் தாமிரபரணி வெள்ளத்தால் பலரது வீடுகள் இடிந்து நாசமாகின அனைத்துக் கடை வியாபாரிகள் நலச்சங்கம் உறுப்பினராக இருந்து வரும் செய்யது அலி என்ற வியாபாரியி ன் வீடு இந்த கனமழையின் போது முழுவதுமாக இடிந்து விழுந்தது. வியாபாரி செய்யது அலி இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்தார். இந்நிலையில் சக வியாபாரிகளுக்கு உதவிடும் வகையில்  அனைத்துக் கடை வியாபாரிகள் நலச்சங்கம் தலைவர் கே எஸ் முருகன் கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஒவ்வொரு வியாபாரிகளும் தங்களால் முடிந்த தொகையை சங்க உறுப்பினருக்கு வழங்கினர். இதன் மூலம் வசூலிக்கப்பட்ட ரூ 21000 ஐ பாதிக்கப்பட்ட உறுப்பினர் செய்யது அலி யிடம் அனைத்துக் கடை வியாபாரிகள் நலச்சங்கம் தலைவர் கே எஸ் முருகன் தலைமையில்சங்க செயலாளர் மோதி முஸம்மில், பொருளாளர் திருச்செல்வம் , இணைச்செயலாளர் செந்தில் சுப்பிரமணியன், துணைத் தலைவர் சந்தியாகு டேவிட்,செயற்குழு உறுப்பினர்கள் மகாராஜா, வீரபத்திரன், கார்த்திக், சிவாஜி சுப்பையா, நாகூர் மீரான், முனாவர் அலி, ஆகியோர் வழங்கினார்கள். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சங்கத்தின் உறுப்பினரும் வியாபாரியுமான சையது அலிக்கு இந்த நிவாரணத் தொகை பெரும் உதவியாக காணப்பட்டது என்று தெரிவித்தார். வியாபாரிகள் நலனின் தனி அக்கறை கொண்டு இந்த சங்கம் செயல்பட்டு வருவது அறிந்து செய்துங்கநல்லூர் மற்றும் அருகிலுள்ள வியாபாரிகள் பலரும்

அனைத்துக் கடை வியாபாரிகள் நலச் சங்கத்தில் தங்களை உறுப்பினராக இணைத்து வருகின்றனர்.

இந்த சங்கத்தின் தலைவர் கே எஸ் முருகன் தலைமையில்சங்க நிர்வாகிகள் சிறப்பாக செயல்பட்டு வருவதால் வியாபாரிகள் பலரும் இவர்களை மனதார பாராட்டி வருகிறார்கள். இவர்களின் மனிதநேயமிக்க பணிக்கு பல்வேறு அமைப்புகள், பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Previous Post

தூத்துக்குடியில் கனிமொழி எம்பி தலைமையில் பொது மக்களிடம் கருத்து கேட்பு: மாப்பிள்ளையூரணி மக்களுக்கு பட்டா வழங்க பஞ்சாயத்து தலைவர் சரவணகுமார் கோரிக்கை!!

Next Post

2024 நாடாளுமன்றத் தேர்தல் பணி விறுவிறுப்பு : ஓட்டப்பிடாரம் தொகுதி பொறுப்பாளர்கள் சண்முகையா, எம்.எல்.ஏ, பஞ்.தலைவர் சரவணகுமார்   தலைமையில் பூத் கமிட்டி, பாக முகவர் களுடன் முக்கிய ஆலோசனை

Next Post
2024 நாடாளுமன்றத் தேர்தல் பணி விறுவிறுப்பு :  ஓட்டப்பிடாரம் தொகுதி பொறுப்பாளர்கள் சண்முகையா,  எம்.எல்.ஏ,  பஞ்.தலைவர் சரவணகுமார்    தலைமையில்  பூத் கமிட்டி, பாக முகவர்  களுடன் முக்கிய ஆலோசனை

2024 நாடாளுமன்றத் தேர்தல் பணி விறுவிறுப்பு : ஓட்டப்பிடாரம் தொகுதி பொறுப்பாளர்கள் சண்முகையா, எம்.எல்.ஏ, பஞ்.தலைவர் சரவணகுமார்   தலைமையில் பூத் கமிட்டி, பாக முகவர் களுடன் முக்கிய ஆலோசனை

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In