நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் இன்று தூத்துக்குடியில் பொது மக்களிடம் கருத்துக் கேட்கும் பணியை தொடங்கினர்.
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு இன்று முதல் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளது. கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையிலான 11 பேர் கொண்ட குழுவினர் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளனர்.
முதற்கட்டமாக தூத்துக்குடி தொகுதியில் இருந்து சுற்றுப்பயணம் தொடங்கி உள்ளது. இதில் தொழில் துறையினர், கல்வியாளர்கள், மீனவர்கள், சிறு, குறு தொழில் முனைவோர்கள், மாணவர் சங்கங்கள், சூழலியலாளர்கள், மருத்துவர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசு, தனியார் துறை ஊழியர்கள், மக்கள் பிரதிநிதிகள் பொதுமக்கள் என அனைத்துத்தரப்பு மக்களையும் சந்தித்து பேசினர். அவர் அவர்கள் பலரும் தங்கள் கோரிக்கைகளை கனிமொழி எம்பி அவர்கள் மற்றும் இந்த குழுவினரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
திமுக ஒன்றிய செயலாளரும், மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவருமான சரவணகுமார் தலைமையில் ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா மற்றும்,திமுக நிர்வாகி கணேசன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்று எம்பி கனிமொழி அவர்களிடம்
கோரிக்கை மனு அளித்தனர். கோரிக்கை மனுவை திமுக ஒன்றிய செயலாளரும், மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவருமான சரவணகுமார் வழங்கினார்.

இந்த மனுவில் அவர் தெரிவித்ததாவது.
மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் ஏழ்மை நிலையில் உள்ள மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர்
கடந்த 30 ஆண்டு காலமாக இப்பகுதி பொதுமக்களுக்கு பட்டா இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். இவர்கள் அனைவருக்கும் பட்டா வழங்கி உதவிடுமாறு பஞ்சாயத்து தலைவர் சரவணகுமார் கனிமொழி எம்பி அவர்களிடம் கோரிக்கை மனு அளித்தார். நடந்து முடிந்த கிராம சபை கூட்டத்தில் கூட அனைவருக்கும் பட்டா கிடைத்திட தீவிர முயற்சி மேற்கொள்வேன் என பஞ்சாயத்து தலைவர் சரவணகுமார் தெரிவித்திருந்த நிலையில் இன்று தி.மு.க. தேர்தல் அறிக்கை கருத்து கேட்பு கூட்டத்தில் கிராம மக்களுக்காக குறிப்பாக நீண்ட நாள் கோரிக்கையான பட்டா கேட்டு கோரிக்கை மனு அளித்தார். இந்த நிகழ்வு மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு பெரும் மகிழ்ச்சி அளித்துள்ளது.
தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து முடித்ததும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்த கருத்துகள் மற்றும் பொது மக்கள் தெரிவித்த கருத்துகள் அனைத்தும் ஆய்வு செய்யப்படும். அவை அனைத்தும் தொகுக்கப்பட்டு தி.மு.க. தேர்தல் அறிக்கையாக இறுதி செய்யப்படும். அடுத்த மாதம் முதல் வாரத்தில் தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியாக வாய்ப்பு உள்ளது. இந்த சமயத்தில் மாப்பிள்ளையூரணி கிராமத்தில் உள்ள மக்களுக்கு
பட்டா கிடைக்க பெறும் நல்ல செய்தி எதிர்பார்க்கலாம் என பல்வேறு தரப்பினர் நம்பிக்கை தெரிவித்து வருகின்றன. பஞ்சாயத்து தலைவர் எடுத்து வரும் இந்த நடவடிக்கை அனைத்து தரப்பினர்களாலும் பாராட்டப்பட்டது.
செய்தி தொகுப்பு :
எம். கண்ணன்

