தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் 17,18 ஆகிய இரு தினங்கள் பெய்த கனமழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை தொடர்ந்து ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணியில் பல்வேறு பகுதிகளில் மழை நீரானது வெள்ளம் போல் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் நிவாரண உதவிகளை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் அந்தமான் நிக்கோபாத் காங்கிரஸ் சார்பில் தாளமுத்துநகர் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளருமான சரவணக்குமார் தலைமை வகித்தார். மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முன்னிலை வகித்தார். சமூக ஆர்வலர் வக்கீல் மாடசாமி, வரவேற்புரையாற்றினார்.
500 பேர்களுக்கு மழை வெள்ள நிவாரண பொருட்களாக மளிகை பொருட்களை சண்முகையா எம்.எல்.ஏ அந்தமான் நிக்கோபாத் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் எம்.பியுமான பாஸ்கர், முன்னாள் எம்.பி அப்பாத்துரை, ஆகியோர் வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் திமுக ஓன்றிய துணைச்செயலாளர்கள் கணேசன், ராமசந்திரன், ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா, கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி நாகராஜன்,
தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தூர்மணி மற்றும் சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொண்பாண்டி, திமுக கிளைச்செயலாளர் பொன்னுச்சாமி, மற்றும் அகஸ்டின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

