தூத்துக்குடி
தமிழ் மொழி காக்க இன்னுயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கநாள் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி போல்பேட்டையில் தமிழ் மொழி காக்க இன்னுயிர் நீத்த தியாகிகள் படத்திற்கு தலைமை செயற்குழு உறுப்பினரும் மாநகராட்சி மேயருமான ஜெகன் பெரியசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் பகுதி செயலாளர் சுரேஷ்குமார், மாவட்;ட தொண்டரணி துணை அமைப்பாளர் ராமர், மாவட்ட பிரதிநிதி நாராயணன், கவுன்சிலர் தெய்வேந்திரன், முன்னாள் கவுன்சிலர்கள் ரவீந்திரன், ராஜாமணி, பெரியசாமி, வட்டச்செயலாளர் முனியசாமி, குமாஸ்தா சுப்பிரமணி, மற்றும் குமார், பிரபாகர், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

