கன்னியாகுமரி மாவட்டம் திருவள்ளுவர் அறக்கட்டளை சார்பில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு பொங்கல் விழா மற்றும் சிறந்த சமூக சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா நாகர்கோவில் இராமன்புதூரில் வைத்து நடைபெற்றது. கன்னியாகுமரி திருவள்ளுவர் அறக்கட்டளை நிறவனத் தலைவர் ஜான் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் செயற்குழு உறுப்பினர்கள் ராஜேஷ், ஜெயராஜ், ஷாஜி, மெர்லின் பிரபா, காருண்ய ஷோபா, ஜெயசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கொரோனாவை எதிர் கொண்ட முதல் மருத்துவ போராளி டாக்டர். நாகேந்திரன், நாகர்கோவில் காவல் ஆய்வாளர் சாந்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறந்த சமூக சேவகர்கள், குருதி கொடையாளர்கள், இயற்கை ஆர்வலர்கள், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் ஆகியவற்றில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருது வழங்கி கௌரவித்தார்கள். இவ்விழாவில் தூத்துக்குடி மாவட்டம் மட்டுமல்லாது , தமிழகம் முழுவதும் மரக்கன்றுகள், பனை விதைகளை நடவு செய்து நாட்டின் பசுமை போர்வை மேம்பாட்டுக்காக தன்னலம் கருதாது உழைத்து வரும் தூத்துக்குடியை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரும் , தமிழ்நாடு பனை மரங்கள் பாதுகாப்பு (கூட்டு அறக்கட்டளை) கூட்டமைப்பு நிறுவனத் தலைவருமான எம்.ஏ.தாமோதரனுக்கு கொரோனாவை எதிர் கொண்ட முதல் மருத்துவ தேசிய போராளியான மருத்துவர் தி.கோ. நாகேந்திரன் பசுமை தோழன் விருதினை வழங்கி பாராட்டினார். விழாவில் ஏராளமான சமூக ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், தன்னார்வாலர்கள் பள்ளி மாணவ மாணவிகள், பொது மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முன்னதாக திருவள்ளுவர் அறக்கட்டளை பொருளாளர் ஆனந்த் அனைவரையும் வரவேற்று நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்.

