தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் 17,18 ஆகிய இரு தினங்கள் பெய்த கனமழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு ஏற்;பட்டதை தொடர்ந்து தூத்துக்குடி மாநகரின் பல்வேறு பகுதிகளில் மழை நீரானது வெள்ளம் போல் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் நிவாரண உதவிகளை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநில அதிமுக வர்த்தக அணி செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியன் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 700 மீனவர்களுக்கு மழை வெள்ள நிவாரண பொருட்களாக அரிசி, போர்வை, லுங்கி, சீருடை, மளிகை பொருட்கள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் நகர் மன்ற தலைவர் மனோஜ்குமார், பகுதி செயலாளர் பொன்ராஜ், வட்டச்செயலாளர் மில்லை ராஜா, துரைசிங், அருண்குமார், பகுதி அவைத்தலைவர் வக்கீல் குமார், முன்னாள் மாவட்ட மீனவரணி இணை செயலாளர் துரைப்பாண்டியன், வட்டப்பிரதிநிதி ஐயப்பன், சிறுபான்மை அணி அசன், பிரபாகர், ஆகியோர் உடன் இருந்தனர்

