தூத்துக்குடி, ஜன,15
தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடியில் இயேசு விடுவிக்கிறார் என்ற கிறிஸ்தவ மத போதனை ஊழிய ஸ்தாபனம் செயல்பட்டு வருகிறது. இந்த ஸ்தாபனத்தின் நிறுவனர் சகோ.மோகன் சி.லாசரஸ் என்பவர் அப்பகுதியில் கிறிஸ்தவ மத போதனையுடன் அப்பகுதி மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள், மற்றும் சமூக சேவைகள், தொடர்ந்து செய்து வருகிறார். நாலுமாவடியில் உள்ள இயேசு விடுவிக்கிறார் ஊழியங்கள் இடத்திருக்கு பல லட்சக்கணக்கான மக்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்து
கிறிஸ்தவ மத போதனையில் கலந்து கொள்வது வழக்கம் ஆகும். பிரபல கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி லாசரஸ் ஏழை எளிய மக்கள் கல்வி பயிலவும் மற்றும் பேரிடர் காலகட்டங்களில் இப்பகுதி மக்களுக்கு பல்வேறு நிவாரண உதவிகளை முன்னிருந்து செய்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது..
மேலும் நாலுமாவடி சுற்று வட்டார பகுதியில் உள்ள பொதுமக்களின் நீர் ஆதாரத்திற்காக அப்பகுதியில் உள்ள நீரோடைகள் தூய்மைப்படுத்தவும் பல்வேறு உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார். இதனால்
கிறிஸ்தவ மத மக்கள் மட்டுமல்லாமல் அனைத்து சமுதாய மக்களும் போற்றும் வகையில் விளங்கிவரும் மோகன் சி லாசரஸ் கிறிஸ்மஸ் பண்டிகை முன்னிட்டு அனைத்து மதத்தை சார்ந்த அப்பகுதி ஊர் மக்கள் அனைவருக்கும் அசைவ விருந்துகள் வழங்கி வாழ்த்து தெரிவிப்பார். இந்த நிகழ்ச்சியில் ஜாதி மத வேறுபாடு இன்றி பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆண்டுதோறும் கலந்துகொண்டு சிறப்பிப்பது வழக்கம் . சமூகத்தில் அனைத்து தரப்பினரிடமும் நன்மதிப்பு பெற்று விளங்கும் மோகன் சி லாசரஸ் அவர்கள் நன்மதிப்பை கெடுக்கும் வகையில் அவர் மீது யூடியூபில் அவதூறு பரப்பிய சென்னை வாலிபர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இதன் விவரம் சென்னை நெசப்பாக்கம் பகுதியைச் சார்ந்தவர் சார்லஸ் என்பவர் ஆக்டிங் கிறிஸ்டியன் 3.0 என்ற youtube சேனல் மூலம் தமிழகத்தில் உள்ள பல்வேறு கிறிஸ்தவ ஊழிய ஸ்தாபனங்கள் மீது பல்வேறு அவதூறு குற்றச்சாட்டுகளை பரப்புவதும் அவர்கள் குடும்பத்தார் மீதும் வீண்பழி சுமத்தி விளம்பரம் தேடி வந்ததாக கூறப்படுகிறது. அதுபோல் பிரபல மத போதகர் மோகன் சி லாசரஸ் மீது அவதூறு பரப்பிய விசயம் அறிந்த ஏரல் பகுதியைச் சார்ந்த சாந்தகுமார் என்பவர் மேற்படி சார்லஸ் மீது தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் குரும்பூர் காவல் நிலைய காவல்துறையினர் யூடியூபில் அவதூறு பரப்பி வந்த சார்லஸ் மீது வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர் பின்னர் தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் வாலிபரை ஆஜர் படுத்தினர். நீதிபதி வருகிற 24-ஆம் தேதி வரை சார்லசை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து இவர் பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டார். பிரபல மத போதகர் மீது அவதூறு பரப்பிய விசயம் கிறிஸ்தவர்கள் மத்தியிலும் அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில் அவதூறு பரப்பிய சென்னை வாலிபரை தூத்துக்குடி போலீசார் அதிரடியாக கைது செய்தது கிறிஸ்தவர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் ஆறுதலை அளிக்கிறது.

