தூத்துக்குடி சண்முகபுரம் இந்துநாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோவிலில் 301 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
பொங்கல் திருவிழாவையொட்டி பத்திரகாளியம்மன் கோவிலில் மார்கழி மாத கூட்டு பூஜையில் தாய்வீட்டு பிரசாதமாக நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் உலகில் அன்பு அமைதி நிலவளம் வேண்டியும், எல்லா செல்வங்களும், விவசாயம் செழித்து அனைவரும் நலமுடன் வாழ வேண்டி, நோய் நொடி இல்லாமலும், மழைவெள்ளத்தால் பாதித்த அனைத்து மக்களை காக்க வேண்டியும், பஜனை பாடல்களுடன் தீப அலங்காரம் நடைபெற்று பக்தர்கள் அனைவருக்கும் மஞ்சள்குலை, பொங்கல்பூ, மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.


திருவிளக்கு பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

