• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா ஒத்திகையை கனிமொழி எம்.பி பார்வையிட்டு கிராமியக் கலைஞர்களுடன் உரையாடினார்.

policeseithitv by policeseithitv
January 12, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா ஒத்திகையை கனிமொழி எம்.பி பார்வையிட்டு கிராமியக் கலைஞர்களுடன் உரையாடினார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

சென்னை தீவுத்திடலில், சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சிக்கான கிராமியக் கலைஞர்கள் ஒத்திகை நிகழ்ச்சியை திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி பார்வையிட்டார். ஒத்திகையில் ஈடுபட்டுள்ள கிராமியக் கலைஞர்களுடன் கனிமொழி கருணாநிதி புகைப்படம் எடுத்து, உரையாடி மகிழ்ந்தார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

சென்னையில், சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா என்ற பிரமாண்ட கலைவிழா ஜன.13 அன்று தமிழ்நாடு முதல்வரால் சென்னை தீவுத்திடல் தொடங்கி வைக்கப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து ஜன.14 முதல் ஜன. 17 வரை சென்னையின் 18 இடங்களில் கலை விழாக்கள் நடைபெறவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 18 இடங்களில் நடைபெற இருக்கும் சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழாவில் 1500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொள்ளாவார்கள்.

தீவுத்திடல், மாநகராட்சி விளையாட்டு மைதானம், கொளத்தூர், முரசொலிமாறன் மேம்பால பூங்கா (தெற்கு),n பரம்பூர், ராபின்சன் விளையாட்டு மைதானம், இராயபுரம், நாகேஸ்வரராவ் பூங்கா, மைலாப்பூர், செம்மொழிப் பூங்கா, மாநகராட்சி விளையாட்டு திடல், நுங்கம்பாக்கம், பாரத சாரண சாரணியர் திடல், திருவல்லிக்கேணி, மாநகராட்சி மைதானம், நடேசன் பூங்கா எதிரில், தி.நகர், எலியட்ஸ் கடற்கரை, பெசன்ட் நகர், திருவான்மியூர் கடற்கரை, மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானம், சைதாப்பேட்டை, சிவன் பூங்கா, கே.கே.நகர், லேமேக்ஸ் பள்ளி வளாகம், பழனியப்பா நகர், வளசரவாக்கம், கோபுரப்பூங்கா, அண்ணா நகர், ஜெய்நகர் பூங்கா, கோயம்பேடு, எஸ்.வி. விளையாட்டு மைதானம், அம்பத்தூர், அரசு அருங்காட்சியகம், எழும்பூர் என 18 இடங்களில் நடைபெறவுள்ளது.

திமுக துணை பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கடந்த 2007ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது பொங்கல் திருநாளை சிறப்பிக்கும் விதமாக, அரசு சார்பில் ‘சென்னை சங்கமம்’ என்ற பெயரில் கலை பண்பாட்டு திருவிழாவைச் சென்னையில் ஒருங்கிணைத்து நடத்தி வந்தார். இந்நிலையில், 2011-ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அதிமுக ஆட்சியைப் பிடித்த நிலையில், கடந்த 10 வருடங்களாக ‘சென்னை சங்கமம்’ நிகழ்ச்சி முடக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் 2022-ல் இருந்து சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா என்ற பெயரில் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணியில் குடியிருப்பை இழந்த குடும்பங்களுக்கு நிவாரணம்

Next Post

வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட இசைக்கருவிகள், தகவலறிந்தவுடன் புதிய இசைக்கருவிகளை வாங்கி கொடுத்த கனிமொழி கருணாநிதி*

Next Post
வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட இசைக்கருவிகள், தகவலறிந்தவுடன் புதிய இசைக்கருவிகளை வாங்கி கொடுத்த கனிமொழி கருணாநிதி*

வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட இசைக்கருவிகள், தகவலறிந்தவுடன் புதிய இசைக்கருவிகளை வாங்கி கொடுத்த கனிமொழி கருணாநிதி*

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In