தூத்துக்குடி
கடந்த மாதம்17-18 தேதிகளில் பெய்த கனமழை காரணமாக மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட ராஜபாளையம் பகுதியில் வெள்ள சேதம் ஏற்பட்டு பலர் குடியிருப்பு வீட்டை விட்டு வெளியேறினர். நான்கு வாரங்களுக்கு மேலாகியும் வீட்டில் புகுந்த மழைநீர் வடியாமல் மீண்டும் குடியமர முடியாமல் பல குடும்பங்கள் தத்தளித்து கொண்டிருக்கிறார்கள்.
குடும்பங்களுக்கு உதவி புரியும் எண்ணத்துடன் நகர வங்கி ஊழியர் சங்க செயலாளர் கிருஷ்ணமூர்த்தி நாராயணன், ஓய்வு பெற்ற விஜயா வங்கி ஊழியர்கள் நாராயணன், இளங்கோ மந்திரம், ஆகியோர் அப்பகுதிக்கு நேரில் சென்று குடும்பத்தினர்களுக்கு ஆறுதல் தெரிவித்து நிவாரண பொருட்களுடன் நிவாரண தொகையையும் வழங்கினார்கள்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தாளமுத்துநகர் கிளை செயலாளர் அந்தோணி சௌந்தராஜன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட பொருளாளர் சுப்பிரமணியன், வக்கீல் கணபதி சுப்பிரமணியன் ஆகியோர் பாதிக்கப்பட்ட குடும்பங்களை தேர்வு செய்து நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்திருந்தனர்.

