தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த பெரும் மழையால் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக கோரம்பள்ளம் குளம் உடைப்பு ஏற்பட்டது. கூடுதல் பாதிப்பாக அமைந்தது. கடந்த காலங்களில் பெய்த மழையில் பாதிக்காத பகுதியில் கூட இந்த மழை பாதிப்பை ஏற்படுத்தியது.
தூத்துக்குடி மாநகரில் பல்வேறு பகுதியில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் முகாம்களில் தங்க வைத்து அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ள நிலையில் இயல்பு வாழ்க்கை ஓரளவு திரும்பியுள்ளது. சில பகுதிகளில் திரும்பாத நிலையும் இருந்து வருகிறது.

இந்நிலையில் மேயர் ஜெகன் பெரியசாமி மாநகரை பொறுத்தவரை பக்கிள் ஓடையானது மடத்தூர் முதல் திரேஸ்புரம் முகத்துவாரம் வரை மாநகர பகுதிகள் வழியாக சென்று கொண்டிருக்கிறது. தூத்துக்குடி மாநகரில் லசால் பள்ளி எதிர்புறம் முதல் சவேரியானா வரை உள்ள வடிகால், ரயில்வே ஸ்டேஷன் முதல் கரிகளம் காலனி வரை உள்ள வடிகால்கள் அகலப்படுத்தப்பட்டுள்ளது, புதியதாக முத்து நகர் பீச், ஸ்டேட் பேங்க் முன்பு, பெல் ஹோட்டல் முன்பு, எட்டையாபுரம் ரோடு சுசீ பல்க் முதல் கடற்கரை வரை, அன்னம்மாள் கல்லூரி அருகில் உள்ள சத்யா நகர், திருவிக நகர் முதல் நான்கு வழிச் சாலை வரை, ரமேஷ் பிளவர்ஸ் முதல் டோல் கேட் வரை புதியதாக வடிகால்கள் அமைகப்பட்டுள்ளது மேலும் தற்பொழுது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறித்தலின்படி புறநகர் பகுதியில் உள்ள நீரை தடுப்பதற்கும் வெளியேற்றுவதற்கும் சங்கரப்பேரி விலக்கு முதல் நீலா சீ புட்ஸ் அருகில் உள்ள பெரிய பள்ளம் ஓடை வரை புதிய வடிகால் பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த பணிகளினால் பண்டாரம்பட்டி, கங்கா பரமேஸ்வரி காலனி, ஆதிபராசக்தி நகர், மச்சாது நகர் போன்ற பகுதிகளில் மழைநீர் தேங்காது என்று ஆய்வுக்கு பின் மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
ஆய்வின் போது பொறியாளர் சரவணன், உதவி செயற்பொறியாளர் பிரின்ஸ் ராஜேந்திரன், உதவி ஆணையர் தனசிங், மாநகாட்சி மண்டலத்தலைவர் நிர்மல்ராஜ், மாநகராட்சி சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமார், முன்னாள் கவுன்சிலர் ரவீந்திரன், மற்றும் ஜோஸ்பர், பிரபாகர், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், உள்பட பலர் உடனிருந்தனர்.

