தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த பெரும் மழையால் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக கோரம்பள்ளம் குளம் உடைப்பு ஏற்பட்டது. கூடுதல் பாதிப்பாக அமைந்தது. கடந்த காலங்களில் பெய்த மழையில் பாதிக்காத பகுதியில் கூட இந்த மழை பாதிப்பை ஏற்படுத்தியது.
தூத்துக்குடி மாநகரில் பல்வேறு பகுதியில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் முகாம்களில் தங்க வைத்து அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ள நிலையில் இயல்பு வாழ்க்கை ஓரளவு திரும்பியுள்ளது. சில பகுதிகளில் திரும்பாத நிலையும் இருந்து வருகிறது.

இந்நிலையில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மாநகராட்சிக்குட்பட்ட செல்வநாயகபுரம் பகுதியில் நடைபெற்று வரும் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பணிகள் கருத்தபாலம் பகுதியில் நடைபெற்று வரும் வடிகால் மற்றும் சாலை அகலப்படுத்தும் பணிகள் போல்பேட்டை செயின்ட்மேரி காலணி மற்றும் லூர்த்தம்மாள் புரம் ஆகிய பகுதியில் நடைபெற்று வரும் புதிய வடிகால் மற்றும் கல்வெட்டு பணிகள் கிருஷ்ணராஜபுரம் பிரதான சந்திப்பு பகுதியில் தொடங்க இருக்கும் வடிகால் இணைப்பு பணிகள் ஆய்வு செய்து செல்வநாயகபுரம் பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடிகள் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பணிகள் நடைபெறுவதால் பழைய கட்டிடமாக இருப்பதால் அருகிலுள்ள இடத்திற்கு புதிதாக மாற்றுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
மாநகராட்சி மண்டலத்தலைவர் நிர்மல்ராஜ், கவுன்சிலர் தெய்வேந்திரன், வட்டச்செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான ரவீந்திரன், ராஜாமணி, மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் ராமர், மாநகர விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் ரமேஷ், வட்டப்பிரதிநிதி பேச்சிமுத்து, மற்றும் ஜோஸ்பர், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் உள்பட பலர் உடனிருந்தனர்.

