தூத்துக்குடி
தமிழ்நாடு மக்கள் சிறப்பாக பொங்கல் பண்டிகையை கொண்டாடிட வேண்டி தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 1 முழு கரும்பு மற்றும் ரூ.1000 ரொக்கம் உள்ளடக்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என அறிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் 829 நியாய விலைக்கடைகளில் இணைக்கப்பட்டுள்ள 4,38,502 குடும்ப அட்டைகளுக்கும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் நடத்தப்படும் 108 நியாய விலைக்கடைகளில் இணைக்கப்பட்டுள்ள 80,872 குடும்ப அட்டைகளுக்கும், இதர வகை கூட்டுறவு நிறுவனம் மற்றும் சுய உதவிக்குழு மூலம் நடத்தப்படும் 20 நியாய விலைக்கடைகளில் இணைக்கப்பட்டுள்ள 6,695 குடும்ப அட்டைகளுக்கும், 3 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 492 குடும்ப அட்டைகளுக்கும் என மொத்தமாக 960 நியாய விலைக்கடைகளில் இணைக்கப்பட்டுள்ள 5,26,561 தகுதியான குடும்ப அட்டைகளுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு ஜனவரி 10ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் ஆணைக்கிணங்க, தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம் மற்றும் மீனவர்நலன், கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழிகாட்டுதல்படி, ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா ஆலோசனைபடி, மாப்பிள்ளையூரணி ஊராட்சி மாதாநகர் நியாயவிலை கடையில் பொங்கல் தொகுப்பினை தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும், ஊராட்சி மன்ற தலைவருமான சரவணக்குமார் வழங்கினார்.
நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட திமுக சுற்றுசூழல்அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உமாமகேஸ்வரி, பாரதிராஜா மற்றும் நியாயவிலைக்கடை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

