• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடியில் ரேசன் கடை மூலம் பொங்கல் தொகுப்பு பொருட்களை கலெக்டர் லெட்சுமிபதி, மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்கள்

policeseithitv by policeseithitv
January 10, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடியில் ரேசன் கடை மூலம் பொங்கல் தொகுப்பு பொருட்களை கலெக்டர் லெட்சுமிபதி, மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி.
தமிழ்நாடு மக்கள் சிறப்பாக பொங்கல் பண்டிகையை கொண்டாடிட வேண்டி தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 1 முழு கரும்பு மற்றும் ரூ.1000 ரொக்கம் உள்ளடக்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என அறிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் 829 நியாய விலைக்கடைகளில் இணைக்கப்பட்டுள்ள 4,38,502 குடும்ப அட்டைகளுக்கும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் நடத்தப்படும் 108 நியாய விலைக்கடைகளில் இணைக்கப்பட்டுள்ள 80,872 குடும்ப அட்டைகளுக்கும், இதர வகை கூட்டுறவு நிறுவனம் மற்றும் சுய உதவிக்குழு மூலம் நடத்தப்படும் 20 நியாய விலைக்கடைகளில் இணைக்கப்பட்டுள்ள 6,695 குடும்ப அட்டைகளுக்கும், 3 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 492 குடும்ப அட்டைகளுக்கும் என மொத்தமாக 960 நியாய விலைக்கடைகளில் இணைக்கப்பட்டுள்ள 5,26,561 தகுதியான குடும்ப அட்டைகளுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு ஜனவரி 10ம் தேதி முதல் வழங்கப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி எட்டையாபுரம் சாலையில் உள்ள மாவட்ட வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க வளாத்தில் வைத்து நடைபெற்றது. அங்கு அமைந்துள்ள நியாயவிலை கடையில் மாவட்ட கலெக்டர் லெட்சுமிபதி, மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் ஆகியோர் பொதுமக்களுக்கு ரூ.1000 ரொக்கம், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 1 முழு கரும்பு மற்றும், இலவச வேஷ்டி, சேலை ஆகியவற்றை வழங்கி தொடங்கி வைத்தனர்.


விழாவில் மண்டல இணைப்பதிவாளர் வெ.முரளி கண்ணன், சரக துணை பதிவாளர் போ.இரவீந்திரன், வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க செயலாட்சியர் சு.கிருஷ்ணன், பொது விநியோக திட்ட கூட்டுறவு சார்பதிவாளர் வீ.அந்தோணி பட்டுராஜ், கூட்டுறவு ஒன்றிய செயலாட்சியர் ஆ.சாம் டேனியல்ராஜ், மாவட்ட உணவு பொருள் வழங்கல் அலுவலர் அபுல்காசிம், தாசில்தார் ஜான்சன், மாநகராட்சி மண்டல தலைவர் நிர்மல்ராஜ், கவுன்சிலர்கள் ஜாக்குலின் ஜெயா, தெய்வேந்திரன், முன்னாள் கவுன்சிலர்கள் ரவீந்திரன், ராஜாமணி, மாவட்ட பிரதிநிதி செல்வக்குமார், மாநகர தொழிலாளர் நல அணி துணை அமைப்பாளர் ரமேஷ், வட்ட பிரதிநிதி முருகன், மற்றும் அற்புதராஜ், ஜோஸ்பர், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, செய்தி மக்கள் தொடர்பு உதவி அலுவலர் முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

தூத்துக்குடி மழை வெள்ளம் பாதிப்பு மாநகராட்சி பாரபட்சம் அதிமுக கவுன்சிலர் வக்கீல் மந்திரமூர்த்தி குற்றச்சாட்டு

Next Post

மு.வேலாயுதபுரம் மற்றும் குறுக்குச்சாலை நியாயவிலை கடைகளில் பொங்கல் தொகுப்பினை ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் வே.காசிவிஸ்வநாதன் வழங்கினார்

Next Post
மு.வேலாயுதபுரம் மற்றும் குறுக்குச்சாலை நியாயவிலை கடைகளில் பொங்கல் தொகுப்பினை ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் வே.காசிவிஸ்வநாதன் வழங்கினார்

மு.வேலாயுதபுரம் மற்றும் குறுக்குச்சாலை நியாயவிலை கடைகளில் பொங்கல் தொகுப்பினை ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் வே.காசிவிஸ்வநாதன் வழங்கினார்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In