தூத்துக்குடி
தமிழ்நாடு மக்கள் சிறப்பாக பொங்கல் பண்டிகையை கொண்டாடிட வேண்டி தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 1 முழு கரும்பு மற்றும் ரூ.1000 ரொக்கம் உள்ளடக்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என அறிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் 829 நியாய விலைக்கடைகளில் இணைக்கப்பட்டுள்ள 4,38,502 குடும்ப அட்டைகளுக்கும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் நடத்தப்படும் 108 நியாய விலைக்கடைகளில் இணைக்கப்பட்டுள்ள 80,872 குடும்ப அட்டைகளுக்கும், இதர வகை கூட்டுறவு நிறுவனம் மற்றும் சுய உதவிக்குழு மூலம் நடத்தப்படும் 20 நியாய விலைக்கடைகளில் இணைக்கப்பட்டுள்ள 6,695 குடும்ப அட்டைகளுக்கும், 3 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 492 குடும்ப அட்டைகளுக்கும் என மொத்தமாக 960 நியாய விலைக்கடைகளில் இணைக்கப்பட்டுள்ள 5,26,561 தகுதியான குடும்ப அட்டைகளுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு ஜனவரி 10ம் தேதி முதல் வழங்கப்படுகிறது.

தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் ஆலோசனை படி தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநல மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவனின் ஆணைக்கிணங்க, விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன்; வழிகாட்டுதலின் படி, ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய குழு துணை பெருந்தலைவருமான வே.காசிவிஸ்வநாதன், மு.வேலாயுதபுரம் மற்றும் குறுக்குச்சாலை நியாயவிலை கடைகளில் பொங்கல் தொகுப்பினை வழங்கினார்.
நிகழ்ச்சியில் கூட்டுறவு வங்கி செயலாளர் சங்கர், குறுக்குச்சாலை கிளை செயலாளர் லட்சுமணன், நிர்வாகி இரணியன், நியாய விலை கடை விற்பனையாளர் அழகு பாண்டியன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

