தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 5.5 கோடி மதிப்பீட்டில் அறிவுசார் மையம், ஆரம்ப சுகாதார நிலையம், படிப்பகம் போன்றவை
காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, ஆட்சியர், ஆணையர் ஆகியோர் பங்கேற்பு!!!
தூத்துக்குடி, ஜன,5
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் சுமார் 5.5 கோடி மதிப்பீட்டில் அறிவுசார் மையம், ஆரம்ப சுகாதார நிலையம், படிப்பகம் போன்றவைகள்
இன்று 05.01.2024 அன்று
காலை காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில்
சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் சிவந்தா குளம் மாநகராட்சி பள்ளி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள அறிவு சார் மையம்,
சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் ரூபாய் 1.35 கோடி மதிப்பீட்டில் சிதம்பர நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள படிப்பகம்,தேசிய நகர்ப்புற நல வாழ்வு திட்டத்தின் கீழ் பாத்திமா நகர் பகுதியில் ரூ. 1 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் அமையப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையம், தேசிய நகர்ப்புற நல வாழ்வு திட்டத்தின் கீழ் லூர்தம்மாள்புரம் பகுதியில் ரூ. 1 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் அமையப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையம், ஆகியவற்றை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக முதல்வர் திறந்து வைத்தார்.



இந்த நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமிபதி, ஆகியோர் பங்கேற்றனர்
தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி பள்ளியில் நடைபெற்ற இந்த விழாவில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் அறிவு சார் மையம், கல்வெட்டை திறந்து வைத்தார். மேலும் இந்த வளாகத்தில் அமைந்துள்ள படிப்பகத்தை மேயர் ஜெகன் பெரியசாமி குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி, மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் தினேஷ்குமார், பொறியாளர் பாஸ்கரன், உதவி செயற்பொறியாளர் சரவணன், மண்டல ஆணையர் சேகர், தனசிங், பிரின்ஸ், சுகாதார அலுவலர் சுமதி, மண்டல தலைவர்கள் அன்னலட்சுமி கோட்டுராஜா, நிர்மல் ராஜ், வட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன், கவுன்சிலர்கள் முத்துமாரி, பாப்பாத்தி ஆனந்தராஜ், சுரேஷ்குமார், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, ஜீவன் ஜேக்கப், மேயர் உதவியாளர் பிரபாகரன், ஜேஸ்பர், ரமேஷ், உட்பட மாணவர்கள், ஆசிரியர்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

