தூத்துக்குடி விமான நிலையத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளரும் எம்.பியுமான கனிமொழி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.
அப்போது சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணத் தொகையை உயர்த்தி தரவும், உடைப்பு ஏற்பட்ட அனைத்து நீர் நிலைகளையும் உடனடியாக சீரமைத்து கரைகளைப் பலப்படுத்த வேண்டும். விவசாயிகளுக்கு மானிய விலையில் குறுகிய கால நெல் விதைகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளன. மனுவைப் பெற்றுக் கொண்ட கனிமொழி எம்பி, கோரிக்கைகளை அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம் – மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், எம்.எல்.ஏக்கள் சண்முகையா, மார்க்கன்டேயன், மேயர் ஜெகன் பெரியசாமி, மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் உமரிசங்கர், உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

