• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

ஓசூரில் கனகதாசர் 536 ஆம் ஆண்டு ஜெயந்தி விழா கோலாகலம்: தலையில் தேங்காய்கள் உடைத்து, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

policeseithitv by policeseithitv
December 31, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
ஓசூரில் கனகதாசர் 536 ஆம் ஆண்டு ஜெயந்தி விழா கோலாகலம்: தலையில் தேங்காய்கள் உடைத்து, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ஓசூர்,டிச,31

ஓசூர் அருகே உள்ள தேன்கனிக்கோட்டையில் கனகதாச சேவா சமிதி டிரஸ்ட் சார்பில் கனகதாசரின் 536-ஆவது ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. முன்னதாக குறும்பர் சமூக மக்கள் தங்களது குல தெய்வங்களான ஸ்ரீ சிக்கம்ம சிவலிங்கேஸ்வரி தேவி, ஸ்ரீ தொட்டம்மா ஜெகதீஸ்வரி தேவி, ஸ்ரீ லிங்கேஸ்வர ஸ்வாமி, ஸ்ரீ சிக்க வீரம்மாதேவி, பீரேஸ்வர ஸ்வாமி உள்ளிட்ட தெய்வங்களைத் தலை மேல் சுமந்தபடி கலாச்சார கலை நிகழ்ச்சிகளாகிய டொள்ளு குனித, வீரகாசே, வீரபத்திர குனித, கம்சாளே, ஆகிய நடனங்களுடன் ஊர்வலமாகக் கொண்டு சென்றனர்.

சுவாமிகளுக்குச் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தலைமேல் தேங்காய்கள் உடைக்கும் விநோத திருவிழா நடத்தப்பட்டது. இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தேங்காய்களை தலைமேல் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தி கொண்டனர்.

இந்த திருவிழாவில் தேன்கனிக்கோட்டை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதி கிராம பொதுமக்கள் மட்டுமின்றி ஓசூர், பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் குறும்பர் இன மக்கள் கலந்து கொண்டனர். கனகதாசர் ஜெயந்தியை முன்னிட்டு கர்நாடகா மாநிலத்திலிருந்து முக்கிய சிறப்பு விருந்தினர்கள் அழைக்கப்பட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆயிரக்கணக்கான குறும்பர் இன மக்கள் கலந்து கொண்டனர். மேலும் கனகதாசர் ஜெயந்தியை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானங்கள் வழங்கப்பட்டது.

முன்னதாக தேன்கனிக்கோட்டை நகரின் முக்கிய வீதிகள் வழியாக அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் கனகதாசர் சிலை வைக்கப்பட்டு மேளதாளங்கள் முழங்க டொல்லு குணிதா, வீரகாசை, விரபத்ர குணிதா ஆகிய பாரம்பரிய நடனங்களுடன் சிக்கம்மா, தொட்டம்மா, வீரபத்ரப்பா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம தேவதைகள் அலங்கரிக்கப்பட்ட காளை மாடுகளுடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. இதில் பக்தர்கள் பாரம்பரிய முறையில் நடனங்கள் ஆடினர். அப்போது ஊர்வலம் சென்ற சாலைகளில் தேங்காய்கள் உடைக்கப்பட்டன.

அதனைத்தொடர்ந்து சிக்கம்மா, தொட்டம்மா, வீரபத்ரப்பா, சித்தைய்யா, தொட்டய்யா, கரி எல்லம்மா, இராம லிங்கேஷ்வரா, சித்த லிங்கேஷ்வரா,

உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம தேவதைகளுக்கும் காளை மாடுகளுக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இந்த விழாவில் குரும்பர் இன மக்கள் 100க்கும் மேற்பட்டோர் தலைமேல் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தி நூதன வழிபாடு மேற்கொண்டனர். இந்த விழாவில் ஸ்ரீ கனக ஜோதி சேவா சமிதி தலைவர் பாப்பண்ணா தலைமை தாங்கினார். ரவீந்திரநாத், வழக்கறிஞர் ராமகிருஷ்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்கெட் மஞ்சு, எல்லப்பா, ஸ்ரீசோமலிங்கேஸ்வர குரு, குப்பம் ஜெயப்பா, வரத்தூர் சுரேஷ், முன்கிருஷ்ணனப்பா, ஊராட்சி மன்ற தலைவர் வெங்கட்ராமனப்பா, எம் எம் முனிகிருஷ்ணனப்பா, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பீரப்பா, ஓசூர் மாமன்ற உறுப்பினர்கள் ரவி, சிவராமன் உள்ளிட்ட கலந்து கொண்டனர். இந்த விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் ஊன்றுகோல் ஆகியவை வழங்கப்பட்டன.

இந்த விழாவில் பேசிய ஸ்ரீ கனக ஜோதி சேவா சமிதி தலைவர் பாப்பண்ணா, தமிழகத்தில் குரும்பர் இன மக்கள் 40 லட்சத்திற்கும் மேல் உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரண்டு லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். வரும் சட்டமன்றத் தேர்தலில் குரும்பர் இன மக்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள 6 சட்டமன்ற தொகுதிகளை எந்த கட்சி வழங்க முன் வருகிறதோ, அந்த கட்சிக்கு தங்களுடைய இன மக்களின் வாக்குகளை அளிக்க உள்ளதாகவும் அதற்காக சமுதாயத் தலைவர்களை ஒருங்கிணைத்து பேச்சு வார்த்தையில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தார். இந்த விழாவில் தமிழகத்தின் ஒசூர், தேன்கனிக்கோட்டை, தளி, சூளகிரி, கெலமங்கலம், இராயக்கோட்டை மற்றும் கர்நாடக மாநிலத்தின் பெங்களூர், கோலார், ஆனெக்கல் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

செய்தி தொகுப்பு ஜெயபிரகாஷ்

ஓசூர்

Previous Post

தூத்துக்குடியில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு அமைச்சர் கீதாஜீவன் நிவாரண பொருட்கள் வழங்கினார்.  

Next Post

கடப்போம்… கடந்தோம்… கடமையாற்றுவோம் 2024-ஐ வரவேற்போம் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி சூளுரை!!!

கடப்போம்... கடந்தோம்... கடமையாற்றுவோம் 2024-ஐ வரவேற்போம் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி சூளுரை!!!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In