தூத்துக்குடி
தமிழகம் கடந்த 2023ம் ஆண்டு தொடக்கம் முதல் முடிவு வரை பல மறக்க முடியாத சாதனைகளையும், சில சோதனைகளையும் சந்தித்தது.
ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க முடியாது என்றும், ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு இயற்றிய சட்டம் செல்லும் என்றும் உச்சநீதிமன்றம் கடந்த மே 18ம் தேதி தீர்ப்பளித்தது போன்ற நல்ல நிகழ்வுகள் நடைபெற்றன.
புயல் மற்றும் மழை வெள்ள பாதிப்பு ஒரு பக்கம், மனம் கவர்ந்த தலைவர்களின் இழப்பு மறுபக்கம் என தண்ணீரிலும், கண்ணீரிலும் தத்தளித்தவர்கள் தமிழக மக்கள். வரலாற்றில் இடம்பெறக் கூடிய மறக்க முடியாத துயரச்சம்பவங்கள் நிறைந்த ஆண்டாக கடந்த 2023ம் ஆண்டு நிறைவு பெற்றது.

வாழ்வும் வளமும் எல்லாருக்கும் பெரும் வகையில் 2024ம் ஆண்டை ஜாதி, மதம் கடந்து ஏழை முதல் பணக்காரர்கள் வரை அனைவரும் வரவேற்று, கடந்த காலத்தில் நடந்த கசப்பான நிகழ்வுகள் இந்தாண்டு நிகழாமல் அனைவரும் வாழ வேண்டும் என்று இந்து, கிறிஸ்துவம், இஸ்லாம் ஆகிய மூன்று மதத்தைச் சார்ந்தவர்களும் வேண்டிக் கொண்டனர்.
இந்நிலையில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் அவரது இல்லம் மற்றும் மாவட்ட அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளிட்ட பலர் மரியாதை நிமித்தமாக சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறினார்கள். இதில் பத்திரிகைத் துறையைச் சார்ந்தவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
அதே போல் தலைமை செயற்குழு உறுப்பினரும், தூத்துக்குடி மாநகராட்சி மேயருமான ஜெகன் பெரியசாமியையும் கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளிட்ட பலர் மரியாதை நிமித்தமாக சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறினார்கள். இதில் பத்திரிகைத் துறையைச் சார்ந்தவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
தமிழகத்தின் தலைநகரில் மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள், மக்களின் வாழ்வாதாரம் பாதிப்புகள், சிறு, குறு மற்றும் நடுத்தர வியாபார பெருமக்களும் பாதிக்கப்பட்டனர். அதிலிருந்து மீண்டு ஆறுதல் கிடைக்கப் பெற்ற நேரத்தில் எதிர்பார்த்த மழை தூத்துக்குடி மாவட்டத்தில் எதிர்பாராத வகையில் வரலாறு காணாத அளவில் சில இடங்களில் ஓராண்டு முழுவதும் பெய்ய வேண்டிய மழை, 24 மணி நேரத்தில் பெய்ததால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளும் சற்று வேதனையான நிகழ்வாக இருந்தது. இதற்கிடையில் மாநகர பகுதிகளிலும் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளால், பொதுமக்கள், வியாபாரிகள், வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் என பல வகையில் பாதிப்புகள் சந்தித்த சூழ்நிலையிலும், 2024ம் ஆண்டை வரவேற்காமல் ஒதுங்கி விட முடியாது என்ற கோட்பாடுகளுக்கு இணங்க சந்திக்க வந்தவர்களை சந்தித்து கடந்த காலத்தையும் நினைவு கூர்ந்து கடந்த வழிகளையும் எண்ணிப் பார்த்து 2024ம் ஆண்டில் ஆற்ற வேண்டிய பணிகள் இந்த நாட்டிற்கும், இந்த மாவட்டத்திற்கும், மாநகரத்திற்கும் இருக்கிறது என்ற பொறுப்புணர்வை உணர்ந்து அமைச்சர் கீதாஜீவனும், மேயர் ஜெகன் பெரியசாமியும் 2024 தேர்தல் ஆண்டை எதிர்நோக்கி தங்களது கள பணிகளை தொடங்கியுள்ளனர்.

