தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் கனமழையால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சகஜ நிலை சற்று திரும்பியுள்ள நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இப்பகுதி தூத்துக்குடி மாநகராட்சி பகுதியையொட்டி அமைந்துள்ளதால் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆணையின்படியும் கனிமொழி கருணாநிதி எம்.பி அறிவுறுத்துதலின்படியும் மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதிகளில் தேங்கியுள்ள வெள்ள மழைநீரை அகற்றுவதற்கு சிஆர் பம்பு நிறுவனம் சார்பில் வழங்கப்பட்ட நவீன மோட்டார் பம்புகளை மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் வழங்கினார்.

