தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கன மழையால் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் வெள்ளநீர் காட்டாற்று வெள்ளம் அதிகரித்ததால் 80 சதவீத பகுதிகளில் வீடுகளை சூழுந்து பல்வேறு இழப்பீடுகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த பகுதி முழுவதும் படிப்படியாக தேங்கிய நீர் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. சில பகுதிகளில் தேங்கிய நீர் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை இன்னும் திரும்பாத நிலையில் பல்வேறு அடிப்படை பணிகளை மாவட்ட நிர்வாகமும் செய்து வருகிறது.

இந்நிலையில் தூத்துக்குடி முத்தம்மாள் காலணி பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் வெள்ளநீர் எம்ஏசி கார்டன் பகுதிக்குள் புகுந்ததாக வந்த புகாரை அடுத்து இரவு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் அந்த வெள்ளநீரை வெளியேற்றும் மாற்றும் பாதையை சரிசெய்து ஆய்வு மேற்கொண்டார். மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், பகுதி செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட மருத்துவ அணி துணை அமைப்பாளர் மகிழ்ஜான், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் சிவக்குமார் என்ற செல்வின், கவுன்சிலர் தெய்வேந்திரன், மற்றும் கருணா, மணி, ராஜன், உடன் சென்றனர்.

