தென்காசி மாவட்டம்,புளியரை காவல் நிலைய எல்கைகுடப்ட்ட கொல்லம் திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் பறவன்பற்றுகளத்தில் தமிழ்நாட்டிலிருந்து கேரளாவிற்கு கனிமவளம் அனுமதியின்றி கொண்டு செல்வதையும், கேரளாவிலிருந்து கழிவு பொருட்கள் கொண்டு வருவதையும் தடுக்கும் பொருட்டு நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கும் வசதியுடன் புதிதாக காவல் சோதனைச் சாவடி கட்டப்பட்டு
13.03.2021 அன்று தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன் மற்றும் தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுண சிங் ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தென்காசி உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு கோகுல கிருஷ்ணன் செங்கோட்டை வட்ட காவல் ஆய்வாளர் அரிகரன் அவர்கள்,புளியரை காவல் நிலைய சார்பு ஆய்வாளர்கள் .ஞான ரூபி பரிமளா, முருகேசன் மற்றும் காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்



