தூத்துக்குடி வெள்ள நீரில் பாதிக்கப்பட்ட ஏபிசி கல்லூரிக்கு பின்புறம் உள்ள ஓம் சக்தி நகர், கே.வி.கே. சாமி நகர் உள்பட இதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ள நிவாரண தொகுப்புகளை மாநில திமுக இளைஞரணி துணைச் செயலாளர் தூத்துக்குடி ஜோயல் வழங்கினார்.
நிகழ்ச்சயில் முன்னாள் தூத்துக்குடி மாநகர பகுதி செயலாளர் பென்னி, தொழிலதிபர் பாபு, தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் பால்துரை, வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் ஜோ, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் டினோ, மாநகர திமுக இளைஞரணி துணை அமைப்பாளர்கள் பிரவின்குமார், முகம்மது, பொன்சேகர், செந்தில், மாவட்ட உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற பொருளாளர் சேக்முகமது, நற்பணி மன்ற துணை தலைவர் சுரேஷ், ஒன்றிய நற்பணி மன்ற செயலாளர்கள் பாரி, ரவி, தூத்துக்குடி மாநகர நற்பணி மன்ற தலைவர் ராஜா, திமுக இளைஞரணியை சேர்ந்த மணி, சகிலன், இசக்கி, விஜய், விக்னேஷ், ஆனந்த், ரோகேஷ், பிரவின், வி.சி.க தொகுதி துணைச்செயலாளர் ராமு (எ) ராமச்சந்திரன் உள்பட அந்தந்த பகுதியை சார்ந்த இளைஞர்கள் உடன் இருந்து வெள்ள நிவாரண உதவிகளை வழங்கினார்கள்.

