இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தூத்துக்குடி மண்டலத்தின் சார்பாக வெள்ளம் பாதித்த காலாங்கரை மற்றும் தெற்கு கலங்கரை பகுதியில் வாழும் மக்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது இந்த நிகழ்வில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியுமான அஜய் குமார் ஸ்ரீ வஸ்தவா கலந்துகொண்டு 325 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.நிகழ்ச்சியில் தூத்துக்குடி மண்டல முதன்மை மேலாளர் நாகையா இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பொது மேலாளர் ரியாசூல்காக் உதவி பொது மேலாளர் அனுப் மற்றும் வங்கி அதிகாரிகள் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.உதவியை பெற்றுக்கொண்ட ஊர்மக்களின் சார்பாக ஊர் தலைவர் பொண்ணு லிங்கம் மேலாண்மை இயக்குனருக்கு பொன்னாடை போர்த்தி நன்றி தெரிவித்தார் . சமுக ஆர்வலர்கள் ஐயப்பன்,முனியாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

