தேசிய அளவிலான வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்று விண்வெளி ஆய்வு கூடத்தை பார்வையிட சாத்தான்குளத்தை சேர்ந்த பிரதீமா தேர்வு பெற்றுள்ளார்.
தேசிய அளவிலான வினாடி வினா போட்டியில் வென்ற சாத்தான்குளம் ஹென்றி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ஆந்திரமாநிலம் ஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட தேர்வு பெற்றுள்ளார். சாத்தான்குளம் ஹென்றி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 12ம் வகுப்பு மாணவி பிரதிமா கோயம்புத்தூர் ஸ்ரீ சக்தி தொழில் நுட்ப கல்லுரியின் முலம் சக்தி பேஸ் மிஷன் என்ற தேசிய அளவிலான வினாடி&வினா போட்டி நடைபெற்றது. இப்போட்டியானது 3 சுழற்சி முறையில் நடைபெற்றதில் தேசிய அளவில் பல பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் சாத்தான்குளம் ஹென்றி பள்ளி பள்ளி 12 ம் வகுப்பு மாணவி பிரதிமா பங்கு பெற்று 3சுற்றிலும் வெற்றி பெற்று ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரி கோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட தேர்வு பெற்றுள்ளார்.
தேசிய அளவில் தகுதி பெற்ற 100 மாணவ,-மாணவியர்களில் ஒருவரான ஹென்றி பள்ளி மாணவி பிரதிமாவுக்கு சாத்தான்குளம் பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு சாத்தான்குளம் ஒன்றிய கவுன்சிலர் பிச்சிவிளை சுதாகர் தலைமை வகித்தார். பள்ளி துனை முதல்வர் சந்தனகுமார் வரவேற்றார். பள்ளி முதல்வர் நோபிள்ராஜ், பள்ளி இயக்குனர் டினோ மெலினா ராசாத்தி , மாணவியை பாராட்டி நினைவு பரிசு வழங்கினர். இதில் ஆசிரியர்கள் சாந்தி, பிரிட்டோ, கிளைட்டன், சுப்பையா, லாவன்குமார், உமா, பள்ளி நிர்வாக அலுவலர் சாந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர் லிங்கதுரை நன்றி கூறினார்.

