கொடைக்கானல் பெருமாள் மலைப் பகுதியில் 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானம் விற்பனை படுஜோர்!!
உளவுத்துறை மற்றும் மதுவிலக்கு போலீசாருக்கு டிமிக்கி கொடுத்த சமூக விரோதிகள் பகீர் தகவல் !!!
தமிழகத்தில் கள்ளச்சாராய விற்பனை, கஞ்சா, போதை வஸ்துகள் விற்பனையை அரசு ஒரு பக்கத்தில் தடுத்தாலும்
மறுபக்கத்தில் மாமூல் வாங்கிக்கொண்டு சில கறுப்பு ஆடுகள் சமூக விரோதிகளுக்கு ஆதரவாக செயல்படுவதால் பல மாவட்டங்களில்
கள்ளச்சாராய விற்பனை, கஞ்சா, போதை வஸ்துகள் விற்பனை படுஜோராகவும், துணிகரமாக நடந்து வருகிறது. தமிழகம் முழுவதும்
போதை வஸ்துகள் விற்பனையை
தடுக்கக்கோரி பல்வேறு அரசியல் கட்சிகள்
பல்வேறுகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இருந்தாலும் இதனை கட்டுப்படுத்த முடியாமல்
போதை வஸ்துக்கள் விற்பனை தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்கிறது.
இதற்கு உரிய நடவடிக்கை துரிதமாக எடுத்திருந்தால் கள்ளச்சாராய உயிரிழப்புகள் நடந்திருக்காது. எனவும் அரசியல் கட்சிகள் பல குற்றம் சுமத்துகிறது.
தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம் பெருகி ஓடிக்கொண்டிருக்கிறது.
அனுமதியில்லாத பார்களில் விற்கப்பட்ட பிராந்தி பாட்டில்கள் அனைத்தும் போலி மதுபானங்கள் தான். போலி மதுபான விற்பனையில் மட்டும் ரூ.10 ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் செய்து வரி இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும். மத்திய புலனாய்வுத்துறையும் இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவும் கோரிக்கை வலுத்து வரும் நிலையில்

திண்டுக்கல் மாவட்டம்
மதுவிலக்கு போலீசார், உளவுத்துறை போலீசார், கொடைக்கானல் சரகம் உள்ளிட்ட அனைத்து போலீஸார்களுக்கும்
டிமிக்கி கொடுக்கும் வகையில் சமூக விரோதிகள்
கொடைக்கானல் பெருமாள் மலைப் பகுதியில் 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானம் விற்பனை யை படுஜோராக செய்து வருகிறார்களாம்.
கொடைக்கானல் பெருமாள் மலைப் பகுதியில் அரசு மதுபானை கடை இல்லாததால் இந்தப் பகுதியில் தனியார் மதுபான கடை ஒன்று உருவாகி உள்ளது . இந்தக் கடையில் வெளிப்புறம் பழக்கடை ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு
இருக்கும் நிலையில் வெளிப்பகுதி பழக்கடை போன்றும் கடைக்கு
உள்ளே சென்று பார்த்தால்
ஒரு அரசு மதுபான கடை போல், தனி நபர்கள்
ரம், விஸ்கி, பீர், என அனைத்து வகை மதுபான வகைகளையும் 24 மணி நேரமும் கனஜோராக விற்பனை செய்கிறார்களாம், இந்தப் பகுதியில் குடியிருப்புகள், உள்ளதால் பெண்கள், மாணவிகள், பலர் அச்சத்தில் உறைந்து உள்ளனர்.
அரசு விதிமுறைகள் மற்றும் கடை திறக்கும் நேரங்கள் இந்த தனியார் டாஸ்மாக் கடைக்கு இல்லாததால் குடிமகன்கள் எந்த நேரங்களிலும் இந்தக் கடைக்கு சென்று மது வாங்கிக் கொள்ளலாம் என்பதால் விலையை குவாட்டருக்கு 200க்கு மேல் விற்பனை செய்து வருகிறார்களாம். இதனை குடிமகன்கள் தட்டி கேட்டால்
கலால் துறை, உளவுத்துறை, மதுவிலக்கு போலீசார், லோக்கல் அரசியல் பிரமுகர்கள் என பல்வேறு தரப்பினர்களுக்கு மாமூல் வழங்க வேண்டியது உள்ளது.
எங்களுக்கும் நிறைய செலவுகள் உள்ளன
ஆகையால் இதுதான் இங்கு ரேட் வாங்க விருப்பம் இருந்தால் வாங்குங்கள் இல்லை என்றால் கட்டாயம் இல்லை போ என அடியாட்கள் சகீதமாக ஒரு குட்டி ராஜ்ஜியம் ஆகவே இங்கு விற்பனை நடைபெறுகிறதாம். இதுபோல் கொடைக்கானலில் மட்டும் அரசு மதுபான கடை இல்லாத பகுதியில் சுமார் ஐந்துக்கு இடங்களில் மேல் தனி நபர்கள் நடத்தும்
போலி மதுபான கடை செயல்படுகிறதாம் அரசு டாஸ்மார்க் கடையிலிருந்து விலைக்கு வாங்கி கூடுதல் விலைக்கு 24 மணி நேரமும் விற்கும்
இந்த தனியார் மதுக்கடையில் போலி மதுபானங்கள் விற்பதாகவும் கூறப்படுகிறது. இதுபோன்று கள்ளச்சாராய விற்பனை நடைபெறுவதால் கொடைக்கானலில் பல மது பிரியர்களின் உயிருக்கு ஆபத்து காத்திருக்கிறது என சமூக ஆர்வலர்கள் கூறி வருகிறார்கள்.
கொடைக்கானல்
உளவுத்துறை மற்றும் மதுவிலக்கு போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து வரும் சமூக விரோதிகள் பின்னணி குறித்து விரிவான தகவல்களை ஆதாரங்களுடனும் வீடியோ பதிவுகளுடன் நேர்மையான உயர் காவல்துறை உயர் அதிகாரிகள் கவனத்திற்கு எடுத்துச் செல்ல உள்ளனர். சமூக ஆர்வலர்கள்.. புற்றிசல்போல் போலி மதுபான கடை
கொடைக்கானல் பகுதிகளில் 100 மேற்பட்ட இடங்களில் இருந்து வந்த நிலையில் கொடைக்கானல் உதவி ஆய்வாளர் கிருஷ்ணகுமார் தனது அதிரடி நடவடிக்கை மூலம் வெகுவாக குறைத்துள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோல் மசாஜ் சென்டர், என்ற பெயரில் பாலியல் தொழிலில் ஈடுபடும் கும்பல்களுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கி வருகிறார். கொடைக்கானலில் செயல்படும்
இன்னும் மீதமுள்ள கடைகளையும் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலையில் உள்ள திண்டுக்கல் மாவட்ட மதுவிலக்கு போலீசார், கொடைக்கானல் உளவுத்துறை போலீஸ் சார், கொடைக்கானல் எஸ்பி சிஐடி, கொடைக்கானல் எஸ்பி கான்ஸ்டபிள்
ஆகியோர் முழுமூச்சாக செயல்பட்டால் மட்டுமே போலி மது பானக்கடையை அகற்ற முடியும் இந்த விஷயத்தில் காவல்துறையின் நடவடிக்கையில் காலதாமதம் ஆகும் பட்சத்தில் போலி மதுபானம் குடித்து கொடைக்கானல் பகுதியில் பலர் உயிர்பழிக்கு ஆளாக நேரிடும் ஆகையால் திண்டுக்கல் மாவட்ட எஸ்பி கொடைக்கானல் டிஎஸ்பி கலால் துறை இணைந்து கொடைக்கானலில் புற்றீசல் போல் உருவாகியுள்ள போலி மதுபான கடையை அகற்ற தீர்வு காண வேண்டுமென பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர்
திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை என்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

செய்தி தொகுப்பு:
போலீஸ் செய்தி நியூஸ் சேனல்
செய்திப் பிரிவு குழு..
சென்னை.

