தூத்துக்குடி மாநகராட்சி மேயராக ஜெகன் பெரியசாமி பொறுப்பேற்ற காலம் முதல் மாநகராட்சி வளர்ச்சி பணிகளில் முழுமையாக கவனம் செலுத்தி வருகிறார். இரவு பகல் பாராமல் எல்லா பகுதிகளிலும் நடைபெறுகின்ற பணிகளை சுழற்சி முறையில் பார்வையிட்டு ஒப்பந்ததாரர்களிடம் நல்லமுறையில் பணிகளை செய்திட வேண்டுமென்று கூறி பணியாற்றி வருகிறார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட மில்லர்புரம் பகுதியில் நடைபெற்று வரும் புதிய தார்சாலை பணிகளையும், புதிய பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்து நிறுத்துவதற்கான இடம் ஏற்பாடு செய்து கொடுத்த பின் மேலூர் ரயில் நிலையம் அருகில் இருப்பதால் பொதுமக்களின் பயன்பாடு அப்பகுதியில் அதிகரித்துள்ளது.
மேலும் இருசக்கர வாகனம் நிறுத்துவதற்கான இடத்தில் கார், வேன் போன்ற வாகனங்களும் நிறுத்துவதற்கு இடவசதியும் செய்து தருமாறு வந்த கோரிக்கையை அடுத்து அப்பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்த பின் பத்திபதிவு அலுவலகம் மற்றும் போல்பேட்டை மேற்கு, ஆர்எஸ்பிஆர் நகர், அதை சுற்றியுள்ள கொத்தனார் காலனி, கைலாஷ் மாணிக்கம் மஹால் பின்புறம் உள்ள மேக் கார்டன் மற்றும் குறிஞ்சிநகர் குறுக்கு தெரு ஆகிய பகுதியில் நடைபெற்று வரும் சாலை மற்றும் கால்வாய் பணிகளை பார்வையிட்டு பூபால்ராயர்புரம் பகுதியைச் சார்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதியில் வடிகால் மற்றும் சாலை வசதிகள் செய்து தரும்படி கோரிக்கை வைத்ததையடுத்து அப்பகுதியில் நடைபெற்று வரும் சாலை மற்றும் கால்வாய் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது, பகுதி செயலாளரும் கவுன்சிலருமான சுரேஷ்குமார், கவுன்சிலர்கள் ரெங்கசாமி, பொன்னப்பன், அந்தோணி பிரகாஷ் மார்ஷல், செபஸ்டின் சுதா, மாவட்ட சிறுபாண்மை அணி துணை அமைப்பாளர் அந்தோணி, முன்னாள் கவுன்சிலர்கள் ராஜாமணி, செல்வகுமார், மற்றும் பிரபாகர், ஜோஸ்பர் உள்பட பலர் உடனிருந்தனர்.

