செயின்ட் மதர் தெரசா பொறியியல் கல்லூரி மாணவி மாநில அளவிலான மகளிர் சிலம்பம் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற மாணவியை ஸ்காட் குழும நிறுவனர் முனைவர் கிளிட்டஸ் பாபு பாராட்டினார்.
2023ம் ஆண்டுக்கான மாநில அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு கல்லூரி மாணவியர் பங்கேற்றனர். இதில் செயின்ட் மதர் தெரசா பொறியியல் கல்லூரியின் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் தொடர்பியல் துறை 3ம் ஆண்டு மாணவி அனிதா பங்கேற்றார். சிலம்பு போட்டியில் லாவகமாக வீசி படிப்படியாக முன்னேறினார். போட்டியின் இதில் தொடுமுறை போட்டியில் முதல் பரிசும், சிங்கில் ஸ்டிக் போட்டியில் 2வது பெற்று சாதனை படைத்தார்.
இதற்காக ஊக்கம் அளித்த கல்லூரி முதல்வர் முனைவர் ஜாஸ்பர் ஞானச்சந்திரன், இயக்குநர் ஜார்ஜ் கிளிங்டன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர், மாணவியர், வளாக மேலாளர் விக்னேஷ் உள்ளிட்டோரை ஸ்காட் கல்வி குழும நிறுவனர் முனைவர் கிளிட்டஸ் பாபு பாராட்டினார்.

