தூத்துக்குடி சிதம்பரனார் நினைவு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு அமைச்சர் கீதாஜீவன் சைக்கிள்; வழங்கினார்
தூத்துக்குடி.
தமிழக அரசின் சார்பில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி ரெங்கநாதபுரத்தில் அமைந்துள்ள சிதம்பரனார் நினைவு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவியர்களுக்கு சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் திட்டத்தின் கீழ் தூத்துக்குடி சிதம்பரனார் நினைவு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 56 மாணவ, மாணவியர்களுக்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சருமான கீதாஜீவன் கலந்துகொண்டு சைக்கிள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
விழாவில் பள்ளி செயளாளர் வள்ளியம்மாள் திருச்சிற்றம்பலம், தலைமை ஆசிரியர் சங்கரேஸ்வரி, தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் வள்ளியம்மாள், பள்ளி நிர்வாக குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், சோமநாதன், மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், வட்டச்செயலாளர் கங்காராஜேஷ், மற்றும் மணி, ஆசிரியைகள், மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

