தூத்துக்குடி மாநகர பகுதியில் ஓரே சாலை மட்டுமே முக்கிய சாலை இருந்து வருகிறது. அந்த சாலையில் தான் பல்வேறு வியாபார தளங்கள் செயல்பட்டு வருகின்றன. மைய பகுதியில் மிகவும் பழமையான நீதிமன்றம் அதன் அருகில் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமணை நீதிபதிகள் குடியிருப்பு இருந்து வருகின்றன. அதன் பகுதியில் போக்குவரத்து சிக்னல் இருப்பதால் பல சமயங்களில் கடுமையாக நெருக்கடி ஏற்பட்டு அவசரத்திற்கு மருத்துவ மணைக்கு வரும் பொதுமக்கள் வாகனங்கள் வந்து செல்வதற்கும் இடையூறுகள் ஏற்படுகின்றன.
அதனால் புறநகர் பகுதியில் ஓருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்று ஏற்கனவே வடக்கு மாவட்ட திமுக செயலாளர் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜுவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோரை நேரில் சந்தித்து வழக்கறிஞர்கள் கோரிக்கை மனு அளித்திருந்தனர். இதற்கிடையில் மாவட்ட நீதிமன்ற கண்காணிப்பு நீதிபதிகளிடமும் மனு அளித்திருந்த நிலையில் மாநகராட்சிக்குட்பட்ட புறநகர் சங்கரப்பேரியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைய உள்ள இடத்தினை அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை முதன்மை செயலாளர் அமுதா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது, மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லோக.பாலாஜி சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், சப்கலெக்டர் கௌரவ்குமார், தாசில்தார் பிரபாகர், ஆகியோர் உடனிருந்தனர்.

