தூத்துக்குடி.
மாநகராட்சி வளர்ச்சிக்கு தமிழக அரசு பல்வேறு நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. மக்கள் பிரதிநிதிகளும் தங்களது வார்டுகளுக்குட்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு தூத்துக்குடி எம்.பி. கனிமொழி, அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோரிடம் கோரிக்கை மனு கொடுத்து, வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் எஸ்.இ.பி.சி. பவர் பிரைவேட் லிமிடெட் சார்பில் 60-வது வார்டுக்குட்பட்ட கோவில்பிள்ளை நகரில் 36.5 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால் கால்வாய் மற்றும் நீரேற்று நிலையத்தை திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், கலெக்டர் லட்சுமிபதி, மேயர் ஜெகன் பெரியசாமி, துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் வக்கீல் பாலகுருசாமி, மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப், கிழக்கு மண்டல தலைவர் கலைச்செல்வி, பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், எஸ்.இ.பி.சி. பவர் பிரைவேட் லிமிடெட் நிர்வாக மேலாளர் சீனிவாச ரெட்டி, தலைமை ஒருங்கிணைப்பாளர் நரேந்திரா மற்றும் மணி, பிரபாகர், ஜோஸ்பர், லிங்கராஜா, அல்பட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

