தூத்துக்குடி
தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் அனைத்து துறைகளிலும் மக்கள் நலன் கருதி வேலைவாய்ப்பு கல்வி மருத்துவத்துறை என பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தொலைநோக்கு பார்வையோடு திட்டங்கள் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் தமிழகம் வளர்ச்சியடைந்து முதன்மை மாநிலமாக உருவாகும் வகையில் உன்னதமான பணிகள் அனைத்து துறைகளிலும் நடைபெறுகின்றன.
இந்நிலையில் தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடுத்திட்ட சிறப்பு முகாம் சனிக்கிழமை ஞாயிறுகிழமை காலை 9மணி முதல் மாலை 4 மணி வரை இரு தினங்கள் தூத்துக்குடி மில்லர்புரம் புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வைத்து நடைபெறுகிறது. இந்த சிறப்பு முகாமை தேவைப்படுவோர் குடும்ப அட்டை அசல், மற்றும் நகல், ஆதார்காடு அசல், மற்றும் நகல், ஆகிய விவரங்களுடன் சென்று மருத்துவ காப்பீடு அட்டையை பெற்று பயனடையவும் பழைய கலைஞர் காப்பீடு திட்ட அட்டை வைத்திருப்பவர்களும் புதுப்பித்துக்கொண்டு பயனடையுமாறு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கேட்டுக்கொண்டுள்ளார்.

