• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

கலைஞர் எல்லாவற்றையும் தைரியமாக எதிர்கொண்டதால் முதல்வராக, தலைவராக விளங்கினார் – கனிமொழி எம்.பி பேச்சு – அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மேயர் பங்கேற்பு!!!

policeseithitv by policeseithitv
December 1, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
கலைஞர் எல்லாவற்றையும் தைரியமாக எதிர்கொண்டதால் முதல்வராக, தலைவராக விளங்கினார் – கனிமொழி எம்.பி பேச்சு – அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மேயர் பங்கேற்பு!!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி.

திமுக மகளிர் அணி சார்பில்; கலைஞர் நூற்றாண்டைக் கொண்டாடும் வகையில் கலைஞர் 100 வினாடி வினா போட்டி, திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழி தலைமையில் தூத்துக்குடி மாணிக்கம் மஹாலில் வைத்து நடைபெற்றது.

‘கலைஞர் 100 வினாடி வினா’ போட்டியின் மண்டல அளவிலான இரண்டாம் கட்ட போட்டியில் கனிமொழி எம்.பி போட்டியாளர்களுக்கு ஆறுதல் பரிசு வழங்கி, கனிமொழி எம்.பி பேசுகையில்: கலைஞர் வாழ்விலிருந்து ஒன்றை கற்றுக் கொள்ளலாம். இந்த விளையாட்டில் போட்டியாளர்கள் பலரும் பாதுகாப்பாக விளையாட வேண்டும் என்பது தெரிகிறது. ஆனால் கலைஞர் இவ்வாறு பாதுகாப்பாக இருக்க மாட்டார். எதையும் தைரியமாக எதிர்கொண்டு ஆடுவார், அதனால் தான் 5 முறை முதலமைச்சராகவும், நாடே போற்றும் மாபெரும் தலைவராக இருக்கிறார்.

இந்த போட்டியின் போட்டியாளர்களில் இளைஞர்கள் பலரும் திராவிட இயக்கம்- கலைஞர் வாழ்க்கை – தமிழரின் வரலாற்றை தேடித்தேடி படிக்க ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது, என்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது என்று கனிமொழி எம்.பி பேசினார்.

சிறப்பு அழைப்பாளர்களாக விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சருமான தங்கம் தென்னரசு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் உரையாற்றினார்கள்.

மண்டல அளவிலான இரண்டாம் கட்ட போட்டியில், தூத்துக்குடி மண்டலத்தில் (திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி) ஆகிய மாவட்ட குழுக்கள் பங்கேற்றனர். 18 வயதிற்கு மேற்பட்டோர்க்கானப் போட்டியில் திருநெல்வேலி அணி வெற்றிபெற்றது, இந்த குழுவில் சரவணா செல்வி, நடராஜன், சரண்யா ஆகியோர் பங்கேற்றனர். 18 வயதிற்கு உட்பட்டோருக்கான போட்டியில் கன்னியாகுமரி அணி வெற்றிபெற்றது. இந்த குழுவில் அர்ச்சனா, அபிநயா, ஆதர்ஷினி ஆகியோர் பங்கேற்றனர். இவர்கள் அரையிறுதி போட்டிக்கு முன்னேறினர்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிக மதிப்பெண்கள் பெறும் குழுக்கள் மண்டல சுற்றுக்கு முன்னேறுவார்கள். இது ஒரு குழு வினாடி வினா போட்டியாக இருக்கும், ஒரு குழுவில் மூன்று நபர்கள் பங்குபெறுவர். கலைஞர் 100 வினாடி வினா போட்டியின் மண்டல அளவிலான இரண்டாம் கட்ட போட்டிகள், தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி உள்ளடக்கிய 12 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, இரு பிரிவினருக்கும் தனித்தனியே நடைபெறும் இப்போட்டி மொத்தம் 5 சுற்றுகளாக நடைபெறும். ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிக மதிப்பெண் எடுத்த ஒரு குழு என, 39 குழுக்கள் மண்டல அளவிலான இரண்டாம் கட்ட போட்டியில் பங்குபெறுவர்.

அரையிறுதியின் வெற்றியாளர்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவார்கள். இரு பிரிவுகளிலும் இறுதிச் சுற்றில் வெற்றிபெறும் அணிகளுக்கு தலா ரூ. 10 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும். இரு பிரிவுகளிலும் 2ஆம் இடத்தை பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.6 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும். இரு பிரிவுகளிலும் மூன்றாமிடம் பெறும் அணிகளுக்கு தலா ரூ.3 லட்சம் ரொக்கப் பரிசு அளிக்கப்படும். வௌ;வேறு சுற்றுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆறுதல் பரிசுகள் வழங்கப்படும். இறுதிப் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் பரிசு வழங்குகிறார்.

நிகழ்வில், எம்எல்ஏக்கள் சண்முகையா, மார்கண்டேயன், மேயர் ஜெகன் பெரியசாமி, மாநில திமுக மகளிரணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, மாநில திமுக மகளிர் தொண்டரணி துணை செயலாளர் விஜிலா சதியானந்த், மாநில மகளிரணி பிரச்சாரக் குழு செயலாளர் ஜெஸி பொன்ராணி, மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் உமரிசங்கர், மாநர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், துணைச் செயலாளர் கீதா முருகேசன், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப், பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, கஸ்தூரிதங்கம், இராஜா, மாநில பேச்சாளர் இருதயராஜ், வடக்கு மாவட்ட திமுக அணி அமைப்பாளர்கள் வக்கீல் பாலகுருசாமி, வக்கீல் குபேர் இளம்பரிதி, வக்கீல் சீனிவாசன், வக்கீல் அசோக், கவிதா தேவி, ரமேஷ், மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் அருணாதேவி, பார்வதி, நிக்கோலஸ் மணி, கோகுல்நாத், மாநகராட்சி மண்டல தலைவர்கள் அன்னலெட்சுமி, கலைச்செல்வி, நிர்மல்ராஜ், பகுதி செயலாளர்கள் ராமகிருஷ்ணன், மேகநாதன், ஜெயக்குமார், ரவீந்திரன், சுரேஷ்குமார், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், மாநகர அணி அமைப்பாளர்கள் அருண் சுந்தர், வக்கீல் கிறிஸ்டோபர் விஜயராஜ், ஜெயகனி, பரமசிவம், சீத்தாராமன், துணை அமைப்பாளர்கள் ரவி, பால்ராஜ், சண்முகவடிவு, சீத்தாலெட்சுமி, குமரன், தொழிலாளர் அணி துணை தலைவர் செந்தில்குமார், கவுன்சிலர்கள் சரவணக்குமார், விஜயக்குமார், நாகேஸ்வரி, வைதேகி, சுப்புலெட்சுமி, விஜயலெட்சுமி, ராஜேந்திரன், ராஜதுரை, ஜெயசீலி, இசக்கிராஜா, மாவட்ட பிரதிநிதி நாராயணன், தொழில்சங்க செயலாளர் மரியதாஸ், வட்ட செயலாளர்கள் மூக்கையா, டென்சிங், சிங்கராஜ், பொன்ராஜ், சுப்பையா, சுரேஷ், கருப்பசாமி, கங்காராஜேஷ், முத்துராஜா, இலக்கிய அணி தலைவர் சக்திவேல், துணை தலைவர் நலம் ராஜேந்திரன், தகவல் தொழில்நுட்ப அணி சுரேஷ்குமார், பொறியாளர் அணி தலைவர் பழனி, மின்வாரிய தொழிற்சங்க தலைவர் பேச்சிமுத்து, பகுதி இளைஞரணி அமைப்பாளர் சூர்யா, துணை அமைப்பாளர் செந்தூர் பாண்டி, வட்ட துணைச் செயலாளர் சந்தனமாரி, வட்ட பிரதிநிதி பாஸ்கர், கூட்டுறவு ரேசன் கடை பணியாளர்கள் சங்க துணைச் செயலாளர் சண்முகராஜ் மற்றும் கருணா, மணி, ரேவதி, பெல்லா, பிரபாகர், லிங்கராஜா, மகேஸ்வரன்சிங், அல்பட், முன்னாள் கவுன்சிலர் ஜெயசிங், நவநீதன், தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சாரதா பொன்இசக்கி, மாவட்ட துணை அமைப்பாளர் தயாநிதி பாண்டியன், மாவட்ட சமூக வலைதள பொறுப்பாளர் மீனாட்சி, வக்கீல் கிருபாகரன், கபடி கந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Previous Post

தூத்துக்குடியை கலக்கிய பிரபல கொள்ளையன் கைது

Next Post

தூத்துக்குடியில் மருத்துவ காப்பீடு திட்ட சிறப்பு முகாம் அமைச்சர் கீதாஜீவன் தகவல்

Next Post
தூத்துக்குடியில் மருத்துவ காப்பீடு திட்ட சிறப்பு முகாம் அமைச்சர் கீதாஜீவன் தகவல்

தூத்துக்குடியில் மருத்துவ காப்பீடு திட்ட சிறப்பு முகாம் அமைச்சர் கீதாஜீவன் தகவல்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In