தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் பல ஆண்டுகளாக கொள்ளையில் ஈடுபட்டு மக்களின் நிம்மதியை கெடுத்த கொள்ளையனை போலீசார் மடக்கி பிடித்தனர்.
தூத்துக்குடி 3 செண்ட் சார்ந்தவர் சுதாகர். இவனை பல திருட்டுகளில் ஈடுபட்டு வந்ததாக தூத்துக்குடி வடபாகம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் மாணிக்கராஜா கடந்த 28.11.2023 அன்று கைது செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி கணேசன் காலனி, அமுதாநகர், சாந்திநகர், சக்திநகர், முனியசாமிநகர் போன்ற பகுதிகளில் மக்கள் வெளியே நடமாட முடியாமலும், வீட்டிற்கு 2 பூட்டு போட்டும் நிம்மதியான உறக்கமின்றி வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதிகளில் கஞ்சா நடமாட்டமும், பல குற்றப்பின்னணி உள்ள பல சமூக விரோதிகளும் சுதந்திரமாக சுற்றித்திரிவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
குறிப்பாக, கணேசன் காலனி பகுதியை சார்ந்த மாநகராட்சி டிரைவர் தங்கராஜ் என்பவரது வீட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன் வீட்டு சுவர் ஏறி குதித்து, 2 செல்போன், 2 ஸ்மார்ட் வாட்ச் மற்றும் 15 ஆயிரம் பணத்தை துணிகரமாக கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுசம்பந்தமாக அவர் தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். அவர்களால் குற்றவாளியை பிடிக்க முடியவில்லை. பின்னர் சில மாதங்கள் கழித்து வழக்கு விசாரணை தூத்துக்குடி மத்திய பாகம் காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டது. அப்படியும், திருட்டில் ஈடுபட்ட குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் அந்த வழக்கு விசாரணையை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தூத்துக்குடி வடபாகம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் மாணிக்கராஜா வசம் ஒப்படைத்தார். இதை சவாலாக எடுத்துக் கொண்டு விசாரணை மேற்கொண்ட அவர் குற்றவாளியை பிடித்தே தீருவது என்ற முடிவு கட்டி, தீவிர விசாரணையில் இறங்கினார். பலகட்ட விசாரணையில் தூத்துக்குடி 3 செண்ட் பகுதியை சார்ந்த சுதாகர் என்பவரை அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும் வேறு ஏதேனும் குற்ற செயலில் ஈடுபட்டுள்ளரா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாணை நடத்தி வருகின்றனர்.
பல மாதங்களாக தேடி வந்த குற்றவாளி பிடிபட்டதில், தூத்துக்குடி கணேசன் காலனி, அமுதாநகர், சாந்திநகர், சக்திநகர், முனியசாமிநகர் பகுதியை சார்ந்த பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.
தூத்துக்குடி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று வழக்கு விசாரணையில் தனி கவனம் செலுத்தி, வழிகாட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனுக்கும்,
போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து வந்த குற்றவாளியை மடக்கி பிடித்த வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாணிக்கராஜாவுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

