• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

இந்தியாவிற்கே வழிகாட்டியாக தமிழகம் உள்ளது மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கி அமைச்சர் கீதாஜீவன் பேசினார்

policeseithitv by policeseithitv
December 1, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
இந்தியாவிற்கே வழிகாட்டியாக தமிழகம் உள்ளது மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கி அமைச்சர் கீதாஜீவன் பேசினார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி

தமிழக அரசின் சார்பில் பள்ளி மாணவ-மாணவியர்களுக்கு விலையில்லா இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி புனித பிரான்சிஸ் சவேரியார் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் சார்பில் 320 இலவச சைக்கிள் வழங்கும் விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் அமல்ராஜ் தலைமை வகித்தார்.

வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கி பேசுகையில்:

கல்வியையும் மருத்துவத்தையும் தமிழக முதல்வர் தனது இருகண்களாக கருதி முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டு வருகிறார். சமூகவலைதளங்களை மாணவிவள் பார்க்கும் போது அதில் லைக் கமெண்ட் பண்ணக்கூடாது இதனால் உங்கள் எதிர்காலம் பாதிக்கப்படும். நீங்கள் படிக்கக்கூடிய படிப்பு இந்த சமுதாயத்திற்கு பயன்பட வேண்டும். பள்ளி படிப்பு நமக்கு முக்கியமான கால கட்டம். தன்னம்பிக்கையுடன் கல்வியை கற்று அறிவுத்திறனையும் பெற்று இந்த சமுதாயத்திற்கு மட்டுமின்றி நாட்டிற்கும் உங்கள் வீட்டிற்கும் நன்மை கிடைக்கும் வகையில் செயல்பட வேண்டும். உங்கள் வாழ்வில் ஓளியேற்றுவதற்காக மெழுகுவர்த்தியை போல் உருகி உங்களுக்கு வெளிச்சத்தை கொடுக்கும் ஆசிரியர்களை மதித்து நடக்க வேண்டும் அன்னையும் பிதாவும் முன்னறிவு தெய்வம். இங்கு படிக்கின்ற மாணவிகள் கல்லூரி படிப்பையும் பயின்று, பல்வேறு உயர் பதவிகளுக்கு வர வேண்டும். படிப்பறிவோடு பொதுஅறிவையும் வளர்த்து கொள்ள வேண்டும். தமிழக முதலமைச்சருக்கு கல்வியும் மருத்துவ துறையும் இரண்டு கண்கள் என்று பல விழாக்களில் அவர் பேசியுள்ளார். தமிழ்நாட்டின் பெருமையை உலகம் முழுவதும் எடுத்துச்செல்ல வேண்டும் இந்தியாவில் கல்வியில் வளர்ச்சி பெற்ற மாநிலமாக தமிழகம் திகழ்ந்து இந்தியாவிற்கே வழிகாட்டியாக உள்ளது என்றார்.

விழாவில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், கவுன்சிலர் ரிக்டா, வட்டச்செயலாளர் டென்சிங், மாநகர மீனவரணி துணை அமைப்பாளர் ஆர்தர்மச்சாது, பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், வட்டப்பிரதிநிதி பாஸ்கர், மற்றும் பெல்லா, மணி, அல்பட், உள்பட ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். பள்ளியின் தாளாளர் அகஸ்டின் நன்றி கூறினார்.

Previous Post

தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர், மேயர், ஆணையருக்கு கவுன்சிலர்கள் பாராட்டு

Next Post

தூத்துக்குடியை கலக்கிய பிரபல கொள்ளையன் கைது

Next Post
தூத்துக்குடியை கலக்கிய பிரபல கொள்ளையன் கைது

தூத்துக்குடியை கலக்கிய பிரபல கொள்ளையன் கைது

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In