தூத்துக்குடி.
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதி முழுவதும் ஒவ்வொரு பகுதியாக பொதுமக்களின் குறைகளை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று வருகிறார்.
தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 13வது வார்டுக்குட்பட்ட குறிஞ்சி நகரில் உள்ள பெரியசாமி நகர் பகுதிகளில் கழிவுநீர் வடிகால் மற்றும் பேவர் பிளாக் சாலை அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகளை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டார். பின்னர் அப்பகுதி பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், பொறியாளர் சரவணன், மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் பிரின்ஸ் ராஜேந்திரன், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், கவுன்சிலர் ஜாக்குலின் ஜெயா, மாவட்ட பிரதிநிதி செல்வகுமார், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், வட்டச் செயலாளர் ராஜாமணி, மற்றும் மணி, அல்பட் உள்பட பலர் உடனிருந்தனர்.

