தூத்துக்குடி.
தூத்துக்குடி மீளவிட்டான் பகுதியைச் சேர்ந்த ஆர்.சுதாகர் இல்லத்திருமண விழா வருகிற 29-ம் தேதி புதன் கிழமை தூத்துக்குடியில் வைத்து நடைபெற இருக்கிறது.
தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள் சேர்மனும், மாவட்ட அதிமுக தொழிற்சங்க தலைவருமான ஆர்.சுதாகர்-ஷர்மிளா தம்பதியரின் மகள் சுஷாலு ரத்னா-விற்கும், ஆறுமுகநேரியைச் சேர்ந்த தொழிலதிபர் ஜவஹர் -தங்ககல்யாணி தம்பதியரின் மகன் டாக்டர் தினேஷ்பாபு-விற்கும் இரு வீட்டு பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு, வருகிற 29.11.2023 அன்று காலை 9 மணியளவில் தூத்துக்குடியில் உள்ள மாணிக்கம் மஹால் கல்யாண மண்டபத்தில் வைத்து திருமணம் நடைபெற இருக்கிறது.

இத்திருமணவிழாவிற்கு முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமை வகிக்கிறார்.
மேலும், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், கூட்டுறவு சங்க அதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்கள் என பல பொதுநல அமைப்பைச் சேர்ந்த பலர் திருமணவிழாவில் கலந்து கொண்டு மண மக்களை வாழ்த்துகின்றனர்.
திருமண விழாவிற்கான ஏற்பாடுகளை மணமகள் வீட்டார்களான ஆர்.சுதாகர், எஸ்.ஷர்மிளா, எஸ்.சுனேஷா ஆகியோர் சிறப்பாக செய்து வருகின்றனர்.

