தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாநில இளைஞர் அணி செயலாளரும் விளையாட்டு மற்றும் மேம்பாட்டுத் துறை சிறப்பு திட்ட செயலாக்க துறை அமைச்சருமான உதயநிதிஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமணையில் பிறந்த 15 குழந்தைகளுக்கு தங்கமோதிரம் அணிவித்து தாய்மார்களுக்கு ஊட்டசத்து பரிசு பெட்டகங்களை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.
பின்னர் பழைய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினார்.
நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா, மாநகராட்;சி மண்டலத் தலைவர் கலைச்செல்வி, மருத்துகல்லூரி டீன் சிவக்குமார், உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெபமணி, மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப், மாநகர துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், பிரமிளா, கனகராஜ், பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூரிதங்கம், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதாதேவி, கலைஇலக்கிய அணி துணை அமைப்பாளர் சோமநாதன், மாநகர அயலக அணி அமைப்பாளர் வக்கீல் கிறிஸ்டோபர் விஜயராஜ், மாநகர மகளிர் அணி அமைப்பாளர் ஜெயக்கனி, மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரவி, பகுதி துணைச்செயலாளர் தங்கம், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் சூர்யா, கவுன்சிலர்கள் சரவணக்குமார், விஜயலட்சுமி, விஜயகுமார், கந்தசாமி, ஜெயசீலி, தெய்வேந்திரன், ஜான், பொன்னப்பன், சுதா, மரியகீதா, ராஜேந்திரன், ராஜதுரை, நாகேஸ்வரி, ராமர், இசக்கிராஜா, மதிமுக கவுன்சிலர் ராமுத்தம்மாள், கம்யூனிஸ்ட் கவுன்சிலர் தனலட்சுமி, அரசு வழக்கறிஞர்கள் ஆனந்தகபரியேல்ராஜ், மாலாதேவி, மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், தொழிற்சங்க செயலாளர் மரியதாஸ், வட்டச்செயலாளர்கள் கதிரேசன், சிங்கராஜ், சுப்பையா, பாலகுருசாமி, கங்காராஜேஷ், மூக்கையா, செல்வராஜ், டென்சிங், பொன்னுச்சாமி, வட்டச் துணைச்செயலாளர் சந்தனமாரி, வட்டப்பிரதிநிதி சரவணக்குமார், மகளிர் அணி பெல்லா, சத்யா, ரேவதி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தெற்கு மாவட்ட திமுக மாணவரணி சார்பில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி சவேரியார்புரத்திலுள்ள முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு தெற்கு மாவட்ட திமுக மாணவரணி அமைப்பாளரும் மாவட்ட கவுன்சிலருமான அருண்குமார் தலைமையில் உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட துணை அமைப்பாளரும் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற உறுப்பினருமான தங்கமாரிமுத்து, மாவட்;ட துணை அமைப்பாளர்கள் பிரசாத், காட்வின்ராஜா, பிரவீன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி சிலுவைபட்டியில் உள்ள பார்வையற்றோர் கருணை இல்லத்தில் உள்ளவர்களுக்கு மாற்றுத்திறனாளியான உதயநிதி ஜுஸ்பார்க் ஜஸ்டின் முட்டை பிரியாணி வழங்கினார். விடுதி காப்பாளர் லூர்து பாக்கியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


வடக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் பிரதீப் தலைமையில் தூத்துக்குடி கால்டுவெல் காலணியில் உள்ள நேசக்கரங்கள் முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு உணவுகள் வழங்கி கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
பின்னர் அண்ணா பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. விழாவில் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் மகேந்திரன், ராதாகிருஷ்ணன், பாரதி, ஜோசப் அமல்ராஜ், வட்டப்பிரதிநிதி துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

