தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிழக்கு ஓன்றிய திமுக சார்பில் மாநில இளைஞர் அணி செயலாளரும் விளையாட்டு மற்றும் மேம்பாட்டுத்துறை சிறப்பு திட்ட செயலாக்க துறை அமைச்சருமான உதயநிதிஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மற்றும் கால்நடை துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் வழிகாட்டுதலின் படி மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு நடைபெற்ற விழாவிற்கு தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவருமான சரவணகுமார் தலைமை தாங்கி 120 தூய்மை காவலர்களுக்கு சேலை நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விழாவில் தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, ஓன்றிய திமுக துணைச்செயலாளர்கள் கணேசன், ராமசந்திரன், வசந்தகுமாரி, ஓன்றிய மகளிர் அணி அமைப்பாளர் ஜெஸிந்தா, மாவட்ட பிரதிநிதி சிவக்குமார், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, பெலிக்ஸ், சக்திவேல், தங்கமாரிமுத்து, கிளைச்செயலாளர்கள் காமராஜ், பொன்னுசாமி, குருசாமி, குரூஸ், மகாராஜா, ரத்தினகுமார், பிரபாகர், ஜெயபாண்டி, சரவணன், இம்மானுவேல், வெற்றிவேல், நாராயணமூர்த்தி, ஜான், சந்திரசேகர், பழனி, வேல்ராஜ், மாரியப்பன், முத்துக்குமரன், பொன்ரத்தினம், கருப்பசாமி, காசி, மகளிர் அணி சண்முகத்தாய், அங்காள ஈஸ்வரி, இளைஞர் அணி சேவியர், ஆனந்த், ராஜேந்திரன், கௌதம், சிலுவைப்பட்டி ஜெயசீலன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

