தூத்துக்குடி
திமுக மாநில இளைஞர் அணி செயலாளரும் விளையாட்டு மற்றும் மேம்பாட்டுத் துறை சிறப்பு திட்ட செயலாளக்க துறை அமைச்சருமான உதயநிதிஸ்;டாலின் பிறந்தநாளை முன்னிட்டு எளியோர் தினமாக கொண்டாடப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டதையொட்டி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, வழிகாட்டுதலின்படி
வடக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் பிரதீப் தலைமையில் தூத்துக்குடி கால்டுவெல் காலணியில் உள்ள நேசக்கரங்கள் முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு உணவுகள் வழங்கி கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

பின்னர் அண்ணா பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. விழாவில் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் மகேந்திரன், ராதாகிருஷ்ணன், பாரதி, ஜோசப் அமல்ராஜ், வட்டப்பிரதிநிதி துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

