தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதி முழுவதும் ஒவ்வொரு பகுதியாக பொதுமக்களின் குறைகளை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று வருகிறார். அதன்படி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் தூத்துக்குடி 47வது வார்டுக்குட்பட்ட இனிகோ நகரில் சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பேவர் பிளாக் சாலை அமைக்கப்படவிருக்கும் பகுதியை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டார்.

மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், கவுன்சிலர் ரெக்சிலின் உள்பட பலர் உடனிருந்தனர்.

