தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதி முழுவதும் ஒவ்வொரு பகுதியாக பொதுமக்களின் குறைகளை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று வருகிறார்.
தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 4, 5வது வார்டுக்குட்பட்ட கிருஷ்ணராஜபுரம் மற்றும் முத்துக்கிருஷ்ணாபுரம் பகுதிகளில் அமைக்கப்பட்ட கழிவுநீர் வடிகால் மற்றும் சாலைகளை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டார்.

மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் ஜெயக்குமார், மாநகர அயலக அணி அமைப்பாளர் கிறிஸ்டோபர் விஜயராஜ், வட்ட துணைச் செயலாளர் சந்தனமாரி, கவுன்சிலர்கள் நாகேஸ்வரி, அந்தோணி பிரகாஷ் மார்சலின், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், மற்றும் மணி, அல்பட், உள்பட பலர் உடனிருந்தனர்.

